ஆர்.எஸ்.எஸ் புகாரின் காரணத்தால் பதவியை துறந்த அய்.ஏ.எஸ். அதிகாரி

 போபால் ஜூன், 11- மத்தியப் பிரதேச மாநிலம் சிறந்த அதிகாரி என்ற பெயரெடுத்த துஷார் பஞ்சால் என்ற முதல்வரின் தனி ஆலோசகராக நிய மித்தார், இதனை அடுத்து துஷார் மத்தியப் பிரதேச முதல்வருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

 இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் துஷார் பஞ்சால் மோடி அரசை விமர்சித்த பல பதிவுகளை தன்னுடைய சமூகவலை தளத்தில் பகிர்ந்திருந்தார். இது அவரால் எழுதப் பட்டது அல்ல, பிறர் அவரது சமூக வலைதள பகுதியில் பகிர்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

அவர் மாநில அரசின் முக்கிய பதவிக்கு நியமிக் கப்பட்டதற்கு டில்லி பாஜக செய்தி தொடர் பாளர் தஜிந்தர் பால் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். 

ஒரு இந்து விரோதி யான இவர் மக்களின் நன்மைகளுக் காகவே இரவு பகல் பாராது உழைக்கும் மோடியின் மீதான விமர்சனங்களை ரசிக்கும் ஒருவர் உங் களுக்கு உதவியாளாராக இருப்பது  தேவையா எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் சில செய்தி களையும் பகிர்ந்திருந்தார் அதில்  இந்துக்கள் மற்றும் மோடிக்கு எதிராக உள்ள பதிவுகள் அவரது சமூக வலைதளங்களில் இடம் பெற்றிருந்தும் அதில் இருந்தது,.

இதைத் தொடர்ந்து டில்லி ஆர் எஸ் எஸ்  தலைவர்களில் ஒருவரான ராஜிவ் துலி துஷாரின் பழைய டிவீட்டை சுட்டிக் காட்டிமத்தியப் பிரதேச மாநிலம் பல நல்ல கலாச்சாரம் மற்றும் திறமையான பத்திரிகை யாளர்களைக் கொண்டது. 

அவர்களில் ஒருவரை எடுத்துக் கொள்ளாமல் ஏன் சிவராஜ் சிங் இவரை தேர்வு செய்துள்ளார்? எனக் கேள்வி எழுப்பி னார். 

மேலும் பல பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையொட்டி துஷார் பஞ்சால் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தம்மால் இந்த பதவியை ஏற்க முடியாது என அறிவித்து கடிதம் எழுதி உள்ளார்.   

மேலும் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் எவ்வித கருத்தும் தெரி விக்க மறுத்துள்ளார்.

ப்ல விருதுகளையும் திறமையான பேச்சாளர் எந்த வித அழுத்தங் களுக்கும் ஆளாகாமல் பணி புரிந்த ஒரு அதி காரியை இந்து விரோதி என்ற பட்டம் சூட்டி பதவியில் இருந்து விலக வைத்துள்ளனர்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image