கடலூர் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது

கடலூர், ஜூன் 5 கடலூர் மண்டலத்திற்கு உள்பட்ட கடலூர், விருத்தாசலம் மற்றும் சிதம்பரம் கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம் வரவேற்பு ரையாற்றி கருத்து களை கூறினார். மண்டல செயலாளர் நா.தாமோதரன், மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந் திரையன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமை வகித்து உரையாற்றினார். பொது ஊரடங்கு காலத்தில் இணைய வழியாக இன்னும் தோழர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறியதன் அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலும் இந்த கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கரோனா காலத்தில் நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் வாட்ஸ்அப் வழியாக விடுதலை நாளேட்டை அதிக அளவில் பரப்ப வேண்டும். தலை சந்தா சேர்ப்பு பணிகளில் கழக தோழர்கள் முனைப்பு காட்ட வேண்டும். செட்டம்பர் 17 அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுவர் விளம்பரம் எழுத வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.

கூட்டத்தில் கடலூர் மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலாளர் தென் .சிவக்குமார், விருத்தாசலம் மாவட்ட தலைவர் .இளங்கோவன், விருத்தாச்சலம் மாவட்ட செயலாளர் .வெற்றிச்செல்வன், சிதம்பரம் மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் தமிழ் இன மீட்சிக்காக உழைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது. தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, விடுதலை நாளிதழுக்கு சந்தா சேர்த்தல் மற்றும் அறிவுலக பேராசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நூற்று நாற்பத்தி மூன்றாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுவர் விளம்பரம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபா ஜோசப், கடலூர் மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்ச மூர்த்தி, மண்டல மாணவர் கழக செயலாளர் பண்பாளன் , கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்மணி,  செயலாளர் பெரியார் செல்வம், சிதம்பம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அசோக்குமார், செயலாளர் செங்குட்டுவன், தாஜ் அலம் கழக மாவட்ட வழக்குரைஞர் அணித்தலைவர் பழனியாண்டி, புலவர் ராவணன், சிதம்பரம் கண்ணன், தென்னவன், பாலமுருகன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image