'நீட்' தேர்வு கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

சென்னை, ஜூன்10- நீட் தேர்வு உள்பட எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்ப தாகபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறினார். மேலும் பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப் படாத வகையில் மதிப் பெண் வழங்கப்படும் என் றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியா ளர்களிடம் கூறியது:

மருத்துவக் கல்விக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு உள்பட எந்த நுழைவு தேர்வும் கூடாது என்பதே தமிழ்நாடு அர சின் நிலைப்பாடு. தி.மு.. தேர்தல் அறிக்கையிலும், இது குறிப்பிட்டிருந்தது. நீட் தேர்வை ரத்து செய் யக் கோரி பிரதமருக்கு முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

பிளஸ் 2 மதிப்பெண் முறை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அவ் வாறு வழங்கப்படும் மதிப் பெண் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கும். முன் னதாகக் கல்வியாளர்கள், தேர்வுத்துறைச்சார்ந்த அதிகாரிகளுடன் பேசும் போது பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்ப தில் உறுதியாக இருந் தோம். பெரும்பாலானோ ரின் கருத்துகளும் தேர்வை நடத்துவதற்கு ஆதரவாக இருந்தது. எனினும் பொது முடக்கம் அமலில் உள்ள சூழலில் மருத்துவ நிபுணர்களின் ஆலோ சனை (உன்னிப்பாக கவ னித்து - பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட் டது. பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்குக் காலாண்டுத் - தேர்வு, அரையாண்டுத் தேர்வு, அலகுத் தேர்வுகள் என எந்தத் தேர்வுகளும் நடை பெறாத சூழலில் எந்த அடிப்படையில் மதிப் பெண் கணக்கிடுவது என்பதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என ஏற் கெனவே தெரிவிக்கப்பட் டிருந்தது. குழுவின் பரிந் துரையைத் தொடர்ந்து மதிப்பெண்களை மதிப் பிடும் பணிகள் உடனடி யாகத் தொடங்கும். இது குறித்து முதல்அமைச் சரும் சில அறிவுறுத்தல் களை வழங்கியுள்ளார்.

ஏற்கெனவே இரண்டு வாரங்களுக்குள் சிபிஎஸ்இ மாணவர் களின் மதிப்பெண்களைக் கணக்கிடுவது குறித்து மத்திய அரசு அறி விக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குள் தமிழ்நாட்டிலும் மதிப் பெண்கள் கணக்கிடும் பணி முடிவடையும்.

சிபிஎஸ்இ மாணவர் களுக்கு எவ்வாறு மதிப் பெண்கள் வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க உள்ளோம். குறிப்பாக மாணவர்களின் முந்தைய செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படும். ஏனெனில் மற்ற எந்தத் தேர்வுகளும் நடக்காத நிலையில், மதிப்பீடு செய்ய வேறு எந்த வாய்ப்பும் இல்லை. மாண வர்களின் பத்தாம் வகுப் புத் தேர்வு மதிப்பெண் களை எடுக்கப் போகி றோமோ, 9ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அல்லது அவற்றில் அவர்கள் வாங் கிய அதிகபட்ச மதிப் பெண்களை மட்டும் எடுக்கப்போகிறோமோ என்பது குறித்த ஆலோ சனைகளையும் பெற்று வருகிறோம். விரைவில் மதிப்பெண்கள் கணக் கிடப்பட்டு அறிவிக்கப் படும் இவ்வாறு அமைச் சர் கூறினார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image