தந்தைபெரியார் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு...காணொலிமூலம் பெரியாரியல்பயிற்சி....

அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்முடிவுகள்.....

அரியலூர், ஜூன் 5 அரியலூர்-பெரம்பலூர் கழக மாவட்டகலந்துரையாடல் கூட்டம் 30.5.2021 அன்று கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் காணொலிவழியேநடந்தது.

மண்டலதலைவர் கோவிந்தராசு மண்டல செய லாளர் மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் காமராசு முன்னிலை வகித்தனர். புதுவை மாநிலதலைவர் சிவ.வீரமணி, புலவர் ராவணன்,  பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு, நகர தலைவர் அக்ரிஆறுமுகம்,  சு.அறிவன், தங்க.சிவமூர்த்தி, சிவக்கொழுந்து, திலிபன், முத்தமிழ்ச்செல்வன், செந்தில், சின்னசாமி மருதமுத்து திராவிடவிஷ்ணு ரவிகுமார், திராவிடன், வேலாயுதம், செல்வக்குமார், விசயேந்திரன், சீனிவாசன், தமிழரசன் ஆகியோர்பேசினர். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தீர்மானங்களை முன்மொழிந்தார். தலைமைச் செயற்குழு தீர்மானங்களை விளக்கி பேசப்பட்டது.

தீர்மானங்கள்: தி.மு.. கொள்கை பரப்பு செயலாளர் .ராசாவின் மனைவி பரமேசுவரிமற்றும் மறைந்த தோழர்கள் இழப்புக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது,  தந்தை பெரியார் 143ஆவது பிறந்தநாள் விழாவினை

சிறப்பாக கொண்டாடுவது, விடுதலை சந்தா சேர்த்தளிப்பது,  காணொலி வழியே பெரியாரியல் பயிற்சி நடத்துவது... சுவர் விளம்பரம் செய்வது என தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.முடிவில் இளைஞரணி தலைவர் அறிவன் நன்றி கூறினார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image