'ஆட்டம் போடும்' ஆசாமி சிக்கினார் சிவசங்கர் பாபாவுக்கு குழந்தைகள் ஆணையம் சம்மன்

சென்னை,ஜூன்10- சென்னை அருகே கேளம் பாக்கத்தில் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா நடத்தி வரும் சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளிடம் பள்ளி யின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை அளித்த விவகாரம் கடந்த இரண்டு வாரங்களாக 'வாட்ஸ் அப்' மற்றும் யூ - டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது சம்பந்த மாக கடந்த 1ஆம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுமத் தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணையக் குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, சமூக வலைத்தளங் களில் பரவும் சாமியாரின் பாலியல் புகார் குறித்தும், ஆசிரம வளாகத்தில் உள்ள மாணவியர் விடு தியில் எத்தனை மாண வியர் தங்கிப் படிக்கின் றனர் என்றும், அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந் தவர்கள் என்றும் விசா ரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி தமிழ் நாடு பெண்கள் ஆணை யத்தின் சார்பில் அதன் தலைவர்  கவுரி அசோகன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் இப் பள்ளியில் விசாரணை நடத்தினர். இந்த இரு விசாரணைகளின்போது பள்ளி நிர்வாகத்தின் சார் பில் போதிய ஒத்துழைப்பு தரப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இந்நிலை யில், வருகிற 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை குழந் தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தின் முன்பு சிவசங்கர் பாபா, அவரது வழக்குரைஞர், முன்னாள் மாணவிகள், பள்ளி முதல் வர், தலைமை ஆசிரியர், 3 ஆசிரியைகள் உள்ளிட் டோர் ஆஜராக வேண்டு மென சம்மன் அளிக்கப் பட்டுள்ளதாக அதன் தலைவர் சரஸ்வதி ரங்க சாமி கூறினார்.

Comments