அனைவருக்கும் தடுப்பூசி என்று சொல்வது மற்றொரு ஜும்லா (ஏமாற்று வேலை)

 மத்திய அரசின் அறிக்கையை விமர்சித்த மம்தா

கொல்கத்தா, ஜூன் 4- இந்தியர்கள் அனைவருக் கும்  டிசம்பருக்குள் தடுப் பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு சொல்வது வெறும் புரளி என மேற்கு வங்க முதல்வர் மம்தா கடுமையாக விமர்சித்துள் ளார்.

நாடு முழுவதும் கரோனா 2ஆவது அலை யின் தாக்கம் தீவிரமடைந் துள்ளதால், தடுப்பூசி போடும் பணிகளும் தீவி ரப்படுத்தப்பட்டு வரு கின்றன. ஆனால், தேவைக் கேற்ப தடுப்பூசிகள் கிடைப் பதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், கடந்த மூன்றரை மாதங் களாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வரு கிறது. ஆனால், ஏப்ரல் மாத இறுதி வரை21.85 கோடி பேருக்கு தடுப்பூசி  செலுத் தப்பட்டு உள்ளது.

ஆனால்,  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘வரும் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைவ ருக்கும் தடுப்பூசி போடப் படும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட கோவாக் சின் தடுப்பூசி உற்பத்தி, ஜூன் மாதத்தில் மட்டுமே முழு விநியோகத்திற்கு தயாராக இருக்கும் என்று கூறப்படுகிறது.  இது தொடர்பாக, ஏப்ரல் 15ஆம் தேதி பயோடெக்னாலஜி துறையின் அறிக்கையின் படி, பாரத் பயோடெக் நிறுவனம் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை ஒரு மாதத் திற்கு 6-7 கோடி தடுப்பூசி களையும், செப்டம்பர் முதல் ஒரு மாதத்திற்கு 10 கோடி அளவையும் உற் பத்தி செய்ய உள்ளது. இது ஜூலை _ -டிசம்பர் மாதங் களுக்குள் குறைந்தது  52 கோடி அளவுகளில் உற் பத்தி செய்ய உள்ளது.

இதுமட்டுமின்றி, மக்க ளுக்கு கோவிஷீல்டு தடுப் பூசிகள் போடப்பட்டு வரு கின்றன. மேலும், புட்னிக் - 5 போன்ற தடுப்பூசிகளும் இந்தியா வந்துள்ளன. தற் போதைய நிலையில், 15% பேருக்கு  தடுப்பூசியில் ஒரு டோஸ் மட்டுமே கிடைத் துள்ளதால், அடுத்த 7 மாதத்திற்குள் அனைவருக் கும் தடுப்பூசி போடப்படும் உஎன்பது சாத்தியமாகுமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால், மத்தியஅரசோ 4 மாதத்தில் 20கோடிக்கு மேலோனோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது, அதனால் சாத் தியமாகும் என கூறுகிறது. ஆனால் மத்திய அரசின் அறிவிப்பு மக்களை ஏமாற் றும் செயல் என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா   டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்பது வெறும் புரளி என கடுமையாக விமர்சித்து உள்ளார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image