பெரியார் மணியம்மை மருத்துவமனையில் சித்த மருத்துவ சிகிச்சை மய்யத்தில் முதல் நபராக சேர்ந்தவர் நலமுடன் திரும்பினார்

சென்னை,ஜூன்10- சென்னை வேப்பேரிபெரியார் திட லில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவ மனையில் சித்த மருத்துவ சிகிச்சை மய்யம் கடந்த 29.5.2021 அன்று முதல் இயங்கி வருகிறது. மருத்து வர் எம்.கே.மாலதி ஒருங்கி ணைப்பில் சித்த மருத்து வர்கள் கொண்ட குழுவி னர் மய்யத்தில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இதுவரை சிகிச்சை மய்யத்தில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரியார் மணியம்மை கரோனா சிகிச்சைக்கான சித்த மருத் துவ மய்யத்தில் முதல் நப ராக சிகிச்சைக்கு சேர்ந்த வர் நேற்று சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.

ஆவடி ஆரூண்-தேவகி யின் மகன் ஜான் சார்லட் பிரின்ஸ் (வயது 25) சென்னை பெரியார் திட லில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 26.8.1996 அன்று பிறந்தார்.

சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பும் போது, அவருக்கு ஆரோக் கியா கிட், விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

பெரியார் மணியம்மை மருத்துவமனை மிகவும் சுத்தமாக, சுகாதாரமான இடமாக உள்ளது. மன துக்கு மிகவும் அமைதியான சூழலை உணர்ந்தேன். நான் பிறந்த மருத்துவ மனையிலேயே கரோனா வுக்கும் சிகிச்சை பெற்று குணமடைந்தேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image