தடுப்பூசி செலுத்தியபின் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: எய்ம்ஸ் ஆய்வில் நம்பிக்கை தகவல்

புதுடில்லி, ஜூன் 7 தடுப்பூசி செலுத்திக் கொண்டபின் கரோனா தொற்றுக்கு ஆளான வர்கள் யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை என்று ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து முதல் முறையாக நடத்தப்பட்ட ஆய்வில், இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்ற ஆறுதலான தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் தடுப்பூசி இரு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட வர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டார்களா என்பதை இந்த ஆய்வு முக்கியமாகக் குறிப் பிடுகிறது.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் டில்லியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 63 பேரிடம், அவர்கள் தொற்றுக்கு ஆளானபின் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் 36 பேர் இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள், 27 பேர் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் எடுத்தவர்கள். 10 பேர் கோவி ஷீல்ட் தடுப்பூசியும், 53 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர். இதில் 41 பேர் ஆண்கள், 22 பேர் பெண்கள். இதில் யாருக்கும் இணை நோய்கள் இல்லை.

டில்லியில் பெரும்பாலும் உருமாறிய கரோனா வைரஸ் பி.1.617.2, பி.1.1.7 ஆகிய வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த இரு தடுப்பூசிகளும் இந்த வைரஸ்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது, பிரதி எடுக்கிறது, மரபணு வரிசையைப் பயன்படுத்து கிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், தீவிரமான அறிகுறிகளால் பாதிக்கப்படவில்லை. நோயின் தீவிரமும் அதிகமாகவில்லை, உயிரிழப்பும் ஏற்படவில்லை.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட காலம், எந்தத் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்கள் என்பதைக் கணக்கில் எடுக்காமல் பார்த்தபோது, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைவருக்கும் வைரஸ் லோடு அதிகமாகத்தான் இருந்தது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ஏற்பட்டதுபோல் காய்ச்சலும் 5 முதல் 7 நாள்கள் வரை இருந்தது. ஆனால், யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image