ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·       எல்லா நாடுகளுக்கும் ஒரே சதவீதம் கிரீன் கார்டு உச்சவரம்பு சட்டத்தை நீக்க மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கிரீன்கார்டு சதவீதம் 7இல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், இந்திய ஊழியர்களுக்கு பெரியளவில் பலன் ஏற்படும்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

·     அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசியை அளிப்பதற்கு மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு மோடி அரசு செயல்பட தலையங்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·       மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2020-21க்கான நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான (எஸ்.டி.ஜி.) தரவரிசை பட்டியலில் 74 புள்ளிகள் பெற்று தமிழ் நாடு 2ஆவது இடம் பெற்றுள்ளது. கேரளா முதலிடமும், பீகார் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் நீர்வாழ் உயிரினங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பின்தங்கிய தமிழ் நாடு: சுத்தமான குடிநீர் பிரிவிலும் பின்னடைவிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

·  மருத்துவ, பொறியியல் படிப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட பீகார் அரசு மசோதா அறிமுகப்படுத்த உள்ளது.

·  தேச விரோத சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, அச்சட்டத்தை முழுவதுமாக நீக்க வேண் டும் என அய்தராபாத் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் பைசான் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     கோவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்கா எடுத்த முடிவு குறித்து கமலா ஹாரிஸ் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

தி டெலிகிராப்:

·     ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 7 ஆண்டு சான்று, இனி வாழ் நாள் சான்றாக செல்லுபடியாகும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

4.6.2021

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image