ஓவியர் இளையராஜா மறைவு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்

போற்றத்தகுந்த திறமையாளர், 42 வயதே ஆன இளைஞர், ஓவியர் எஸ்.இளையராஜா அவர்களின் மறைவு 6.6.2021 அன்று இரவு சென்னையில் (தனியார் மருத்துவமனை ஒன்றில்) தமிழர் தம் கலைத் துறையில் பெரும் இழப்பாகும். உயிரோவியப் பாணி ஓவியங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்புகழ் எய்திய கடும் உழைப்பாளி. கும்பகோணம் அருகில் செம்பியவரம் பல் என்ற கிராமத்தில் பிறந்து, சிங்கப்பூர், மலேசியா, அமெ ரிக்கா வரையில் சென்று தன் ஓவியத் திறமையால் சிறந்து விளங்கியவர். திராவிட முகங்களை தன் தூரிகையால் ஒளிர வைத்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ஓவியர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலும், இரங்கலும்!

 கடும் தொற்றுச் சூழலில் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதையும், உடனுக்குடன் கவனமாக மருத்துவர்களை அணுக வேண்டும் என்பதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.


கிவீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

7.6.2021

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image