செய்திச் சிதறல்கள்...

 போதாது!

மத்திய அரசு இம்மாதத்துக்கு ஒதுக்கீடு செய்யும் 42 லட்சம் தடுப்பூசி போதாது என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை.

சேவை வரி!

பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்கக் கூடாது. - சென்னை உயர்நீதிமன்றம்.

தடுப்பூசி போட்டவர்களுக்கு...

தடுப்பூசி போட்டும் கரோனா வந்தால் உயிரிழப்பு அபாயம் இருக்காது. - எய்ம்ஸ் ஆய்வு முடிவு.

தள்ளுபடி

பத்ம சேஷாத்திரி பள்ளி புகழ் ஆசிரியர் ராஜகோபாலனின் பிணை மனு - தள்ளுபடி

இணைய வகுப்பு

கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இணையம் வழியான வகுப்புகளுக்குப் புதிய விதிமுறை களை உருவாக்க குழு ஒன்றை உயர்கல்வித் துறை அமைத்துள்ளது.

எரிப்பு!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எரிக்கும் போராட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெற்றது.

கருப்புப் பூஞ்சை

கருப்புப் பூஞ்சை நோய்க்கான ஆம்ஃபேபி டெரிசின் மருந்து உற்பத்திக்கு ஓசூரில் உள்ள மைலான் ஆய்வகத் திற்கு அனுமதி.

எச்சரிக்கை!

மனிதக் கழிவுகளை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்துவதன் காரணமாக மரணங்கள் அதிகரிப்பு. மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

பிரிட்டனில்...

பிரிட்டனில் 12-15 வயதுள்ளவர்களுக்கு அமெரிக் காவின்பைசர்' கரோனா தடுப்பூசி போட அனுமதி!

மேற்கு வங்கத்தில்...

மேற்கு வங்கத்தில் கரோனா தொற்று பாதியாகக் குறைந்துள்ளது - முதலமைச்சர் மம்தா.

Comments