சேலம் மண்டலத்தில் காணொலி வாயிலாக பெரியாரியல் பயிற்சி வகுப்பு

 கழக துணைத்தலைவர் தொடங்கி வைத்தார்

சேலம், ஜூன் 11- சேலம், மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு காணொலி வாயிலாக 3.6.2021 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் துவங்கியது.

பயிற்சி வகுப்பிற்கு மண்டல தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் தலைமையேற்றார். அனைவரையும் வரவேற்று மாநில இளைஞரணி துணைச்செயலாளர் .சுரேசு உரையாற்றினார். ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ.சேகர் முன்னிலையேற்க மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தனது தொடக்க உரையில் இன்றைய காலகட்டத்தில் பெரியாரியல் தேவை குறித்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏன் பெரியார் கொள்கையை பின்பற்றவேண்டும் என்பதையும் இதற்கு முன் குற்றாலம், ஒக்கேனக்கல் போன்ற இடங்களில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாம் குறித்தும் குறிப்பிட்டு பேசினார்.

தொடர்ந்து மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூரபாண்டியன், பெரியாரியல் பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வா. தமிழ் பிரபாகரன் உரையாற்றினர்.

மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் பேசுகையில் மாணவர்களுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் இந்த பயிற்சி வகுப்பு அவர்களது வாழ்வில் பயன்படும் என்பதை எடுத்துக்கூறி இந்த 15 நாட்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பிற்கு தவறாது பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.50/-  மொபைல் இன்டர்நெட் ரீசார்ஜ் () டாப்ஆப் செய்து கொடுப்பதாக அறிவித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

அறிமுக உரையாற்றிய பொதுக்குழு உறுப்பினர் பழனி. புள்ளையண்ணன் கடந்த காலங்களில் நடைபெற்ற பயிற்சி முகாம்களை நினைவு கூர்ந்து தம்மைப் போன்ற பல மாணவர்களுக்கு எப்படி பயன்பட்டது என்பதை பற்றி குறிப்பிட்டார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயிற்சி வகுப்பினை தொடங்கிவைத்து விடுதலை-87 என்ற தலைப்பில் பாடம் நடத்தினார். அவர் தனது உரையில், தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தை உருவாக்கி இந்த தமிழினத்திற்கு ஆற்றிய அரும்பணிகள் குறித்தும் 'விடுதலை' நாளேட்டினை துவக்கி தனது கருத்துக்களை எழுதி மக்களிடையே பரப்பி வந்ததையும், பெரும் சிரமங்களுக்கிடையே நடந்து வந்த விடுதலை நாளேட்டை இன்றைய ஆசிரியர் திராவிடர் கழகத்  தலைவர்  ஆசிரியர் வீரமணி அய்யா அவர்களின் ஏகபோக உரிமைகளோடு ஒப்படைத்ததையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் 'விடுதலை'யில் வந்த தலையங்கங்களால் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் 'விடுதலை' பெட்டிச்செய்தியின் தாக்கங்கள் இன்றைய அறிவியல் காலகட்டத்திற்கேற்ப 'விடுதலை' நாளிதழை ஆசிரியர் அவர்கள் எவ்வாறெல்லாம் தகவல்தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலகமுழுவதும் பரப்பி வருகிறார்கள் என்றும் இணையத்தில் வந்த முதல் நாளேடு 'விடுதலை' என்பதையும் ஆசிரியர் அய்யா அவர்கள் விடுதலையை விளம்பரங்களால் வரும் லட்சங்களை கொண்டு நடத்தாமல் கொள்கை இலட்சியங்களால் இந்த கரோனா காலகட்டத்திலும் லட்சக்கணக்கில் 'விடுதலை' நாளேட்டை PDF றிஞிதிவடிவில் பரப்பிவருவதை எடுத்துக்கூறி மாணவர்களிடம் சிறப்பாக எடுத்துரைத்தார்.

இறுதியாக பெரியாரியல் பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சி.மதியழகன் நன்றி கூறினார். மற்றொரு பெரியாரியல் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சேலம் பா.வைரம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கினார். தொடர்ந்து வகுப்புகள் நடந்து வருகிறது.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image