தகவல்

 ஒரு முதலமைச்சரின் கேள்வி

‘‘மாநில அரசுகளே கரோனா தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துவது - நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது'' - இப்படி சொல்லி இருப்பவரும் ஒரு மாநில முதலமைச்சரே - அவர்தான் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்.

மக்கள் கருத்து

கரோனா கடுமையாகப் பரவிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5 மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டது தவறு என்று 58 விழுக்காடு நகர்ப்புற மக்களும், 61 விழுக்காடு கிராமப்புற மக்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இது ஏபிபி-சி வோட்டர் நிறுவனத்தின் வெளியீடு.

ராமுக்கு சம்மனாம்

கரோனாவைக் குணப்படுத்துவதாக தவறான மருந்தை விளம்பரம் செய்யும் ராம்தேவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தாக்கீது

சரிவு!

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 10.88 விழுக்காடு சரிவு.

ஒரு கண்டுபிடிப்பு

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலுக்குள் அந்த நோய்க்கான எதிர்ப்பாற்றல் வாழ்நாள் முழுவதுமே இருக்கும் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.

விஜய் மல்லையா!

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன்பெற்று, வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவின் சொத்துகள், பங்குகளை விற்க வங்கிகளுக்கு - சிறப்பு நீதிபதிகள் ஆணை!

கருப்புப் பூஞ்சை

கருப்புப் பூஞ்சை நோய்க்கான ஆம்ஃபேபி டெரிசின் மருந்து உற்பத்திக்கு ஓசூரில் உள்ள மைலான் ஆய்வகத்திற்கு அனுமதி.

வழக்குகள் நிலுவை

தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளின் நிலுவை 12.87 லட்சம்.

நகைக் கடன்!

கூட்டுறவு வங்கிகளில் கிராம் ஒன்றுக்கு ரூ.3000 வழங்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தல்

கரோனா பாதிப்பு குறைந்ததும் - தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் திட்டம்.

அமைச்சர் கயல்விழி

ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மக்களுக்குத் தேவைப்படும் புதிய திட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு துறை அமைச்சர் கயல்விழி ஆணை.

போர்க்கொடி!

உத்தரப்பிரதேசத்தில் பா... முதலமைச்சரை எதிர்த்து ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே எதிர்ப்புப் போர்க் கொடி தூக்கும் நிலை; .பி. பா... ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது.

- அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாடி கட்சி

சிங்கம் உயிரிழப்பு!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனாவால் பெண் சிங்கம் உயிரிழப்பு!

நிபுணர்குழு

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க மத்திய அரசு நிபுணர்குழு அறிவிப்பு.

தண்ணீர் திறப்பு

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு - முதல் அமைச்சர் அறிவிப்பு - டெல்டா விவசாயிகள் வரவேற்பு!

22 கோடி பேருக்கு

இந்தியாவில் இதுவரை கரோனா எதிர்ப்புக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோர் 22.1 கோடி பேர்கள்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image