அரசியலில் நாம் இல்லையென்றாலும் நாம் இல்லாமல் அரசியல் இல்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

அரசியலில் நாம் இல்லையென்றாலும் நாம் இல்லாமல் அரசியல் இல்லை!

திருவாரூர் - காரைக்கால் மண்டல திராவிடர் கழக காணொலி கலந்துரையாடல்

கழகத் துணைத் தலைவர்

திருவாரூர், ஜூன் 12  திருவாரூர், காரைக்கால் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில்  4.6.2021 மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

 கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் அருண்காந்தி வரவேற்புரையாற்றினார்.

புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் ராயபுரம் கோபால், திருவாரூர் மண்டல செயலாளர் பொன்முடி, திருவாரூர் மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜன், திருத்துறைப்பூண்டி மாவட்ட தலைவர் முருகையன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் தளபதிராஜ், காரைக்கால் மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பன்னீர்செல்வம், நாகப்பட்டினம் மாவட்ட சிறப்பு புபேஸ்குப்தா, திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் செந்தமிழ்ச்செல்வி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் பொன்முடி, திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், திருவாரூர் மண்டல மாணவர் கழக செயலாளர் உமாநாத் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

  மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா ஜெயக்குமார் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.

பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் சோம. இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு முழுவதும் 19 மண்டலங்களில் நடைபெறக்கூடிய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000, இரண்டாம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 5000 பரிசும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

நிறைவாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனது உரையில்,

திருவாரூர் மண்டலம் என்பது கழகத்தின் பாசறை ஆகும். பெரியாரியல் பயிற்சி வகுப்பில் திருவாரூர் மண்டலத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.

கரோனா காலகட்டம் என்பது நமக்கு பன்மடங்கு வேலையை அதிகரித்திருக்கிறது. நாள்தோறும் நமது தலைவர் காணொலியில் பேசிக்கொண்டிருக்கிறார். பல புத்தகங்களை எழுதி வருகிறார். நாடு முழுவதும் நமது கழகத் தோழர்கள் இணைய வழியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 தமிழர் தலைவர் ஆசிரியர் காலத்தில் நம்முடைய இயக்கம் உலகளாவிய இயக்கமாக மலர்ந்திருக்கிறது. உலகிலேயே ஒரு தலைவர் மறைந்த பிறகு அதே வலிமையோடு இயங்கும் இயக்கம் நம்முடைய திராவிடர் கழகம்தான். இதற்கு காரணம் நம்முடைய தமிழர் தலைவர் ஆவார்.

  பெரியாரின் கருத்துகளும் தத்துவங்களும் மானுடத்தின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டிகளாகும். எனவேதான் நாம் அரசியலில் இல்லாவிட்டாலும், நாம் இல்லாமல் அரசியல் இல்லை என்கிற நிலைமையை உருவாக்கி இருக்கிறோம். நாடு முழுவதும் பார்ப்பனிய எதிர்ப்பு   உணர்வு மேலோங்கி இருக்கிறது.

இதற்கு காரணம் நம்முடைய இயக்கமாகும். கரோனா ஊசி போடுவதில் கூட பார்ப்பனர்களுக்கு தனியாக போட வேண்டும் என்கின்றனர்.

சென்னையில் நடைபெறக்கூடிய ஒரு பிரபலமான அய்ஏஎஸ் பயிற்சி மய்யத்தில் பார்ப்பனர்களுக்கு தனியான வகுப்பு நடத்த வேண்டும் என இன்றைக்கு முடிவு செய்கிறார்கள். இவற்றையெல்லாம் நாம் எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

அதைவிட மிக முக்கியமானது கரோனா வைரசை விட மோசமான வைரஸ் ஆர்எஸ்எஸ்-பாஜக வைரஸ் ஆகும். கிராமப்புறங்களில் இவர்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் - பாஜக - சங் பரிவார கும்பலின் கொடுமைகளை மக்களிடம் தோலுரித்துக் காட்ட நம்முடைய அமைப்பின் பலத்தை பன்மடங்கு கூட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கழகச் செயல்வீரர் சுப்புலட்சுமி அம்மையாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்கள் செயலாக்குவது. விடுதலை நாளேட்டுக்கு சந்தா திரட்டுவது மற்றும் பிடிஎப் பைலாக விடுதலை நாளேடு அனுப்புவது. அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நூற்று நாற்பத்து மூன்றாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் மண்டலம் முழுவதும் சுவர் விளம்பரம் எழுதுவது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்கு அயராது உழைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது. நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று, சிறப்பாக செயலாற்றும் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 கூட்டத்தில் பொறுப்பாளர்கள் புகழேந்தி, ஈவெரா, சிவக்குமார், புயல்குமார், தங்கையன் சுரேஷ் ராஜமணிகண்டன், ராமலிங்கம், மனோகர்,  நன்னிலம் கரிகாலன், ஆறுமுகம், லெனின், சுரேஷ், மகேஸ்வரி, சரவணன், ஆட்டோ தனராஜ், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 நிறைவாக நாகை நகரத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment