வடலூரில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா

வடலூர் ஜோதிநகரில் 3.6.2021 அன்று காலை 9 மணியளவில் முத்தமிழ் அறிஞர்கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் பார்வைக்கு கலைஞர் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இனிப்பும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. கலைஞர் வாழ்க முழக்கம் எழுப்பப்பட்டது. நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், ஒன்றிய தி.மு. செயலாளர்வி.சிவக்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், மண்டல கழக மகளிரணி அமைப்பாளர் ரமாபிரபா,  நகர கழக தலைவர் புலவர் ராவணன், செயலாளர் குணசேகரன், முருகன், முத்தையன், கோ.இந்திரஜித் விஜயன், தி.மு. பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்டஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Comments