தருமபுரி மண்டலத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு

 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார்

தருமபுரி, மே 8- பெரியார் மணியம்மையார் பல்கலைக்கழகத்தின்  சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சி வகுப்பை காணொலி வழியாக கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார்.

பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் விடுதலை வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் பெரியாரியல் பயிற்சி வகுப்பு (காணொலி வழியாக) தருமபுரி மண்டலத்தின் சார்பில் 2.6.2021 மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந் தூரப் பாண்டியன் தலைமையில், தருமபரி மண்டல இளைஞ ரணி செயலாளர் வண்டி ஆறுமுகம் வரவேற் றுப் பேசினார்.

மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில .. துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில இளை ஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன், மாநில மாண வர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தருமபுரி மண்டலத் தலைவர் .தமிழ்ச்செல்வன், செயலாளர் பழ.பிரபு, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி ஆகியோர் முன்னிலையேற்று உரை யாற்றினர்.

தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி, செயலாளர் மு.பரமசிவம், .. தலைவர் மாரி.கருணாநிதி, ஆசிரியரணித் தலைவர் கதிர் செந்தில், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் .யாழ்திலீபன், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பில் தலைவர் .அறிவரசன், செயலாளர் .மாணிக்கம், .. தலைவர் இரா.பழனி, ஆசிரியரணி தலைவர் லூயிஸ் ராஜ், மாநில மாணவர் கழக செயலாளர் எழில்.சிற்றரசு, ஓசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், செயலாளர் மா.சின்ன சாமி, .. தலைவர் கு.வணங்காமுடி, கிருஷ்ணகிரி .. செயலர் .வெங்கடேசன், மருத்துவரணி சு.நாத்திகன் ஆகியோர் முன் னிலையேற்றனர்.

மாநில அமைப்பாளர் உரை

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் பயிற்சி தொடர் பாகவும், அதன் நோக்கத்தைப் பற்றியும், பயிற்சி மாணவர்கள் பங்கேற்பது குறித்து அறிமுகவுரையாற்றினார்.

கழகத் துணைத் தலைவர் உரை

பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனது உரையில் இந்த பயிற்சி முகாமை இரண்டொரு நாளில், குறுகிய காலத்தில் ஏற்பாடுகள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தோழர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள். நம் நாட்டைப் பொறுத்த வரை படித்த பாமரனும் இருக்கிறான், படிக் காத அறிவாளியும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பகுத்தறிவு என்பது தேவைப்படுகிறது. அதற்காகத்தான் இந்த பயிற்சி வகுப்பு. பகுத்தறிவைப் பரப்ப 88 வயதிலும் நாளும் எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறார் நமது தலைவர்.

பகுத்தறிவு உள்ளது

மாணவர்களுக்கு பகுத்தறிவு உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் பயன்படுத்து கிறார்களா என்பதுதான் கேள்வி, மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது. அப்படி இருக்கும்போது பகுத்தறிவுப் பிரச்சாரம் தேவையா என்ற கேள்வி எழுகிறது - கண்டிப்பாக தேவைப் படுகிறது. கரோனா காலமிது. தடுப்பூசியை கண்டுபிடிக்க இரவு பகலாக விஞ்ஞானிகள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே அது தான் பகுத்தறிவு.

மதவாதிகளின் மூடத்தனம்

மதவாதிகள் மாட்டு மூத்திரத்தை குடித்தால், மாட்டுச் சாணத்தை பூசினால் கரோனா நோய் போய் விடும் என்கிறார்களே இதுதான் மூடநம்பிக்கையாகும். 130 கோடி மக்களைக் கொண்ட நாட்டின் பிரதமர் 'கையை தட்டுங்கள்', 'விளக்கேற்றுங்கள்' கரோனா போய்விடும் என்கிறார். நோய் போனதா? அவர் பகுத்தறிவுவாதியா? அதனால், கொசு எங்கே உற் பத்தியாகிறது அதை அப்படி அழிப்பது என்பதே பகுத்தறிவாகும்.

எதையும் காரண காரியத்தோடு சிந்திக்க வேண்டும், செயல் படுத்த வேண்டும் என்றார் தந்தை பெரியார். காணொலியில் ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஒருவர் என்று பலராக சேர்ந்து ஒரே தளத்தில் பேசுகிறோமே இதற்கு காரணம் அறிவியலா? ஆண்டவனா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

தொலைநோக்கு சிந்தனை

ஒவ்வொருவரின் கையிலும், பாக்கெட்டி லும், கம்பி இல்லாத தொலைபேசியை வைத்து பேசிக் கொண்டே போவார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் தொலை நோக்கு சிந்தனை யுடன் கூறினார்கள். அது தான் பகுத்தறிவு சிந்தனை.

பிறப்பின் அடிப்படையில் பேதம்

பிறப்பின் அடிப்படையில் பேதம் கூடாது என்பதுதான் பெரியாரின் கொள்கை, திரு வள்ளுவர் சொல்லியதை விட சுருக்கமாக மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு, பேதமற்ற இடமே மேலான இடம் என்று சொன்னவர் பெரியார். பிறக்கும் போதே ஒருவன் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதற்கு என்ன காரணம் என்று பெரியார் சிந்தித்தார். அதற்குக் காரணம், இந்து மதமும் பார்ப்பனியமும் மனுதர்மமும் என்று உணர்ந்து அதை ஒழிக்கப் பாடுபட்டார்.

ஆண்டவனின் முகத்தில்...

ஆண்டவனின் முகத்தில் ஒருவனும், காலில் ஒருவனும் பிறப்பானா? என்று கேள்வி கேட்டார். அதற்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை.

தந்தை பெரியாரின் கால்படாத இடமோ, ஊரோ, கிராமமோ, நகரமோ இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு 75 ஆண்டு களுக்கு மேலாக ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார். பொதுக் கூட்டத்தில் பேசியபோது முட்டை, மலம், செருப்பு என்று அவர் மீது விசி கலவரம் செய்தார்கள். பாம்பை கூட்டத்தில் விட்டு கலாட்டா செய்தார்கள், கழுதையை கூட்டத்தில் விரட்டினார்கள்.

மூளையில் விலங்கு

ஆனாலும் பெரியார் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். மூளை யில் விலங்கு மாட்டப் பட்டுள்ளது என்பதை அறிந்து பெரியார் அவற்றை தொடர்ந்து பேசி உடைத்தார். தான் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றதை தந்தை பெரியாரைத் தவிர யாரும் பார்க்கவில்லை. அந்த வெற்றியை பெரியார் மட்டுமே பார்த்தார்.

பெரியாரே வழிகாட்டி!

நம்மை எல்லாம் படிக்கக் கூடாது என்று சொன்னது இந்து மதம், இந்த சமூகம் பாழ் பட்டுப் போனதற்குக் காரணம் பார்ப்பனியம். சாதாரண பக்தனாக இருந்தாலும், பட்டை போட்ட பக்தராக இருந்தாலும், அவர்களுக் கும் பெரியாரே வழிகாட்டி. அதனால்தான் 'விடுதலை' பணிமனையை குன்றக்குடி அடி களார் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் ஒரு பார்ப்பன சட்டமன்ற உறுப்பினர்கூட கிடையாது. இதற்கு யார் காரணம்? இந்த உணர்வு எப்படி வந்தது? பெரியார் முதல்வராக இருந்து சட்டம் போட்டா இதை செய்தார்?

பெரியார் ஏற்படுத்திய புரட்சி!

பெரியார் ஏற்படுத்திய இந்த புரட்சியை இந்தியாவே எதிர்பார்க்கிறது. தமிழ்நாட்டில் இருந்துதான் இந்த எதிர்ப்புக் குரல் வருகிறது. இதற்குக் காரணம் பெரியார். இன்றைக்கு பல இயக்கங்கள் கட்சிகள் காணாமல் போய் உள்ளது. ஆனால் திராவிடர் கழகம் இன்றைக்கும் வலிமையோடு இருக்கிறது. எல்லா கட்சிக்கும் பெரியார் உரியவராக இருக்கிறார். அவர் ஊட்டிய இன உணர்வு இன்றும் உயி ரோட்டமாக உள்ளது.

பெரியார் தமிழ்நாட்டில் மாற்றத்தை உரு வாக்கியவர். அதனால் தான் ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரிகளாக இருக்கிறார்கள். எனவே பயிற்சியாளர்கள் தொடர்ந்து 15 நாட்களும் பயற்சியில் கலந்து கொள்ள வேண்டும், நல்ல அறிவுத் தெளிவு பெற வேண்டும். இறுதியில் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று தன் பேச்சில் குறிப்பிட்டார்.

பயிற்சியாளருக்கு பரிசு

தொடர்ந்து 15 நாட்களும் பயிற்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பயிற்சியாளர் களுக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் அமெரிக்காவின் சோம.இளங்கோ வன் சிறப்புப் பரிசு வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

தருமபுரி, வேலூர், சேலம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை அய்ந்து மண்டலங்களில் உள்ள 15 மாவட்டங்களில் பயிற்சியில் தொடர்ந்து 15 நாட்களும் பங்கேற்கும் பயிற்சியாளர்க ளுக்கு அவர்களின் தொலைபேசிக்கு திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் ரூ.50க்கு ரீசார்ஜ் செய்து தருவதாக அறிவித்தார். அதேபோல தருமபுரி மண்டலத்தில் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் ஞான சூரியன் புத்தகம் வழங்குவதாக அறிவித்தார்.

தொடக்க விழா முதல் நாளில் 56 பயிற்று நர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது சிறப்புக்குரியது. இறுதியாக மண்டல திராவிடர் கழக மாணவர் கழக செயலாளர் மா.செல்ல துரை நன்றி கூறினார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image