சுமார் 6 கிலோ எடையுள்ள குழந்தையைப் பெற்ற பெண்!

இங்கிலாந்தில் 28 வயது சாக் என்ற பெண், சுமார் 6 கிலோ எடையுள்ள குழந்தையைப் பெற் றெடுத்துள்ளார்.

குழந்தைகளின் வழக்கமான எடையை விட ஒரு மடங்கு அதிக முள்ள அந்தக் குழந்தையைத் தூக்க 2 பேர் தேவைப்பட்டனர். 2 அடி நீளமுள்ள அந்தக் குழந்தை யைக் கண்டு தாய் மற்றும் தந்தை இருவருமே ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதுதொடர்பாக "டெய்லி மெயில்" வெளியிட்டுள்ள செய்தி யில் இங்கிலாந்து செடிங்டனைச் (Cheddington) சேர்ந்த 27 வயது அமிஸ்மித் அவரது மனைவி 28 வயது சாக்கிற்கும் மார்ச் 25ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.  பிறப்பிற்கு முந்தைய பரிசோதனையில் குழந்தை வழமைக்கும் மாறாக உயரமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டடி உயரமாக இருக்கும் இருக்குமென எதிர்பார்க்கவில்லை என்று அவரது தந்தை கூறினார்.

 6 கிலோ எடைகொண்ட அக்குழந்தைக்கு சிக் என்று பெயர் சூட்டியுள்ளனர். குழந்தையைத் தூக்கிக்கொண்டுவர சிறப்பு தள்ளுவண்டியை மருத்துவமனை ஏற்பாடு செய்துகொடுத்தது, அக்குழந்தைக்கு அண்ணன் ஒருவர் உள்ளார் அவர் 4 வயது. அவரது எடை 7 ஆக இருக்கும்போது அவரது தங்கையின் எடை 6 கிலோ மற்றும் தன்னை போன்றே உயரமாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளார் மேலும் தம்பி மீது அவள் அளவில்லா அன்பு கொண்டிருப்பதாக அமிஸ்மித் கூறினார்.

ஆனால்  இங்கிலாந்தின் மிகப் பெரிய குழந்தை என்ற பெருமை சிக்குக்குக் கிடைக்கவில்லை. காரணம்  2013 பிப்ரவரியில் பிறந்த ஜார்ஜ் ஜோசப் கிங்  பிறக்கு ம் போதே  சுமார் 7 கிலோ எடையில் பிறந்தார். தற்போது அவரும் ஆரோக்கியமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image