தமிழகத்திலேயே தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம்

 தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை,ஜூன் 4- கரோனா தொற்று பரவலைத் தடுக்க கரோனா தடுப்பூசி, உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.. ஸ்டாலின் தெரிவித்திருந் தார். அதன்படி, தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தோடு (டிட்கோ) இணைந்து  தடுப் பூசி, உயிர்காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் உற்பத்தி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட் டிகளைத் தயாரிக்க விருப்பமுள்ள நிறுவ னங்கள் அதற்கான மனுவை அளிக்கலாம் என்றும், அதற்கான கால அவகாசம் மே 31 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலை யில், தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க 45 நிறுவ னங்கள் விருப்பமனு அளித்துள்ளதாக தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது. இதில் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் குறித்து ஆலோசிக் கப்பட்டு, அரசும் தனியாரும் இணைந்து செயல்படக்கூடிய வகையில் குறிப்பிட்ட நிறுவ னங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை தேவை அகிலேஷ்

லக்னோ, ஜூன் 4- உத்தரப்பிரதேச முன்னாள் முதல் அமைச்சர், சமாஜ்வாடி  கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கரோனா தடுப்பூசியில் வெளிப்படைத்தன்மையின் அவசியம் குறித்து அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த தரவுகளை அரசாங்கம் ஏன் பகிரங்கமாக வெளியிடவில்லை? கரோனா தடுப்பூசியில் வெளிப்படைத் தன்மை இருந் தால் மட்டுமே மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவார்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

கரோனா இல்லாத கிராமத்திற்கு பரிசு

உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை,  ஜூன் 4 மகாராட்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கரோனா இல்லாத கிராமம், போட்டியை அறிவித்துள்ளார்.

மகாராட்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.  ஆயினும் மாநிலத்தில் கரோனா முழுக் கட்டுப்பாட்டுக்குள் வர வில்லை.  நேற்று இம்மாநிலத்தில் 2.30 லட்சத் துக்கு மேற்பட்டோர் சிகிச்சையில் இருந்தனர்.

எனவே கரோனாவை முழுவதுமாக ஒழிக்க மாநில அரசு பல திட்டங்களைத் தீட்டி வருகிறது.  தற்போது நகரங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சிற்றூர்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.  எனவே அந்த பகுதி ஊராட்சி மூலம், கரோனாவை ஒழிக்க அம் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே திட்ட மிட்டுள்ளார். அவ்வகையில் மகாராட்டிராவில் அம் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கரோனா அற்ற கிராமனீ என ஒரு போட்டியை அறிவித் துள்ளார்.  இந்த போட்டியின் படி கரோனா இல்லாத கிராமத்துக்கு ரூ.50 லட்சம் வரை பரிசு அளிக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

 

 

 

 

 

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image