கரோனா விளைவாக வறுமைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி தி.மு.க. அரசு தலா ரூ.4000 வழங்கிய உதவி பாராட்டத்தக்கது

வங்கிக் கடன்களை செலுத்திட சிறு, குறு நிறுவனங்களுக்கு கால அவகாசம் தேவை என்பதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்த 12 முதல் அமைச்சர்களுக்குக் கடிதம்  எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர் செயல் முன்னுதாரணமானது

கரோனாவின் காரணமாக வருமானம் - இழந்து வாடும் மக்களுக்கு - தேர்தல் வாக்குறுதிப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 அளித்த தி.மு.. அரசின் உதவி பாராட்டத்தக்கது; சிறு, குறு நிறுவ னங்கள் வங்கிக் கடன்களைத் திருப்பி செலுத்திடக் கூடுதல் அவகாசம் தேவை என்று ஒன்றிய அரசை வலி யுறுத்தும் வகையில் 12 எதிர்க்கட்சி முதல்அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியது முன்னுதாரணமும், மாநில உரிமையும் ஆகும் என்றும் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

கரோனா நோயின் தாக்கத்தினால் நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது கண்கூடு.

கரோனா - வறுமை நிலையைத் தவிர்க்க தி.மு.. அரசின் உதவிக்கரம்!

வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலைகளை ஒன்றிய அரசே நாளும் கூடுதல் வரி மூலம் உயர்த்திடுவது, மக்கள் கையில் பணப்புழக்கம் வெகுவாகக் குறைதல் - காரணம் ஊரடங்கால், சகஜமான வாழ்க்கை முறை வாணிபம் இல்லாததால் வறுமை, (சிற்சில ஊர்களில் சில குடும்பங்கள் கொத்தாக தற்கொலை செய்து கொள்ளும் தாங்கொணாக் கொடுமை)  இவை பரவலாக உயர்ந்ததற்கும் தக்க பரிகார நடவடிக்கைகளை எடுத்து, ஏழை, எளிய, நடுத்தர மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்க வழிமுறைகளை ஏற்படுத்துதல் வேண்டும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் அம் மக்களிடையே பணப்புழக்கம் தடையின்றி ஏற்பட்டால்தான், முதலில் அவர்களுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும் (தன்னிறைவு என்பது வேறு பிரச்சினை) என்பதால்  தேர்தல்  வாக்குறுதியாக தி.மு..தலைவர் தளபதி மு..ஸ்டாலின் தந்த உறுதிமொழிகளை செயல்படுத்த 4000 ரூபாய்களை இரண்டு தவணைகளாகப் பிரித்து, அத்துணை ரேஷன் அட்டைதாரர் குடும்பத்துக்கும் வழங்கி, ஒரு புது நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

பொருளாதார விதிப்படி, ஒருவரின் செலவு மற்றொருவரின் வரவு என்பதால், நிலைமை ஓரளவு சீரடையும் அது தன்னம்பிக்கையை ஊட்டும்.

அதேபோல் சிறு, குறு தொழில் சார்ந்து பணியாற்றுவோரும் கரோனாவின் ஊரடங்கு முடக்கத்தால் பெரிதும் நசிந்து பாதிக்கப்பட்டுள்ளதால், வங்கியில் வாங்கிய கடனை உரிய தவணைகளில் கட்ட இயலாத நிலையும் உள்ளது.

12 எதிர்க்கட்சி முதல் அமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்வரின் ஆக்கப்பூர்வமான கடிதம்

இப்பிரச்சினையை கருணை உள்ளத்தோடு அணுகி, புதிய தீர்வாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சார்ந் தவர்கள், இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்குக் கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக்கோரி, 12 எதிர்க்கட்சி மாநில முதல் அமைச்சர்களுக்கு நமது தமிழ்நாடு முதல் அமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் 8.6.2021 அன்று கடிதம் எழுதியுள்ளது காலத்தால் எடுக்கப்பட்ட சரியான செயல் ஆகும்.

பாராட்டப்பட வேண்டிய தொலைநோக்குப் பார்வையுடன் அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மாநில உரிமைகளைப் பாதுகாக்க கண்ணியம் பொருந்திய கடமை உணர்வுடன் கூடிய காரியமாகும்!

நமது கூட்டு வலிமையை இந்தப் பொருளாதார நெருக்கடி மிகுந்த கால கட்டத்தில் கட்டுவதும், ஒன்றிய அரசிற்குரியவர்களிடம் கூட்டுக் குரல் எழுப்புவதும் நிச்சயம் உரிய பலனை அளிக்கும்.

ஒன்றிய அரசும் ரிசர்வ் வங்கி ஆளுநரும் ஏற்று செயல்படுவது நல்லது

இக்கோரிக்கையை ரிசர்வ் வங்கியின் ஆளுநரும், ஒன்றிய அரசின் நிதியமைச்சரும் ஏற்று செயல்பட்டால், அது நாட்டின் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரமான சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மேலும் நலிவடையாமல் காப்பாற்றப்படும் - தவணைகள் முதல் அலையின்போது அளிக்கப்பட்ட நிவார ணங்களை - மோசமான இந்த இரண்டாம் அலையின்போதும் அளிப்பது அவசியமும், மனிதாபிமானமும் கருணையும் பொங்கும் செயல் அல்லவா!

எனவே, ஆக்கப்பூர்வ யோசனைகளை கூட்டாக அறிவிப்பது 'அரசியல்' செய்ய அல்ல; அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதநேய, மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்புக்காகவே.

தமிழ்நாடும் அதன் முதல் அமைச்சரும் இப்படிப்பட்ட மாநில உரிமைகளைக் காத்து, மனித உரிமைகளை நிலை நாட்டும் பணிகளை - அரசமைப்பு சட்டம் வகுத்துள்ள நெறிகளை வலியுறுத்தி, ஈடுபட்டு தீர்வு காண வேண்டிய பல பிரச்சினைகளுக்கு முன்னோட்டம் ஆகும்.

மாநில உரிமை

முறையான கோரிக்கை; சரியான நேரத்தில் பயனுறு வகையில் விளங்க எழுப்பியுள்ளது மாநில உரிமைகளின் குரல் வலிமை மிக்கது என்று காட்டி, புதிய விடியலை மக்களுக்கு அளிக்க இந்த முயற்சி நிச்சயம் பயன்படும்.


கிவீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

10.6.2021

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image