29 நாள்கள் - 285 வகுப்புகள் - 285 தலைப்புகள் - 285 பேச்சாளர்கள்!

 - வி.சி. வில்வம் -

சாதனைஎன்பதற்கு மேல் வேறென்ன வார்த்தை  இருக்கிறது!

தஞ்சாவூர் மாடல்!

திராவிடர் கழக இளைஞரணி மற்றும் தஞ்சை .பூபதி படிப்பகம் இணைந்து மே 5 முதல் 30 ஆம் தேதி வரை பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்தியது. 

25 மாணவர்கள் -  25 நாள்கள் -  25 தலைப்புகள் என்கிற வகையில் கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரிப் பேராசிரியர் .எழிலரசன், அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் சு.இராஜேந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் நெல்லுப்பட்டு நூலகர் வே.இராஜவேல், ஆகியோரின் ஒருங்கிணைப்பில் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களின் நெறியாள்கையில் அது பெரும் வரவேற்பைப் பெற்றது.

நிறைவு விழாவில் பேசிய தமிழர் தலைவர், ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள், இதைதஞ்சாவூர் மாடல்எனப் புகழ்ந்து, இந்த மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் பரவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஆசிரியர் பேசிய இரண்டே நாளில் 02.06.2021 அன்று தர்மபுரியில் பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் தொடங்கிவிட்டன. அதனைத் தொடர்ந்து  ஜூலை ஒன்றாம் ஆம் தேதி வரைக்கும் பயிற்சி வகுப்புகள்களைகட்ட இருக்கின்றன.  

ஆசிரியர் அவர்களின் இயக்க கட்டமைப்புகள்!

பயிற்சி வகுப்புகள் குறித்துப் பார்க்கும் முன்னர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் அவர்களின் இயக்க கட்டமைப்புகள் குறித்துப் பார்க்கலாம்.

திராவிடர் கழகத்திற்கு எத்தனை மண்டலங்கள், அதில் எத்தனை மாவட்டங்கள் என்பது குறித்துப் பார்ப்போம்!

 1) சென்னை மண்டலம்:

கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், வடசென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகியவை சென்னை மண்டலம்.

இந்த மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப்பாளர், மாநில அமைப்புச் செயலாளர் பொன்னேரி  வே.பன்னீர்செல்வம்.

2) காஞ்சிபுரம் மண்டலம்:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை

3) வேலூர் மண்டலம்:

வேலூர், திருப்பத்தூர், செய்யாறு, திருவண்ணாமலை

4) தர்மபுரி மண்டலம்:

தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி

5)  சேலம் மண்டலம்:

சேலம், ஆத்தூர், மேட்டூர்

6) புதுக்கோட்டை மண்டலம்:

புதுக்கோட்டை, அறந்தாங்கி

ஆகிய மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள் மாநில அமைப்பாளர்  உரத்தநாடு இரா குண சேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன்.

7) விழுப்புரம் மண்டலம்:

விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி

8) கடலூர் மண்டலம்

கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்

9) அரியலூர் மண்டலம்:

அரியலூர், பெரம்பலூர்,

10) புதுச்சேரி மண்டலம்:

புதுச்சேரி

இந்த மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப்பாளர் கழகப் பொதுச் செயலாளர்  முனைவர் துரை.சந்திரசேகரன்

11) திருவாரூர் மண்டலம்:

திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, காரைக்கால்

12) தஞ்சாவூர் மண்டலம்:

தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை

13) திருச்சி மண்டலம்:

திருச்சி, இலால்குடி, கரூர்

14) கோயம்புத்தூர் மண்டலம்:

கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், நீலமலை, திருப்பூர், தாராபுரம்,

ஆகிய மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப்பாளர், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்.

15) ஈரோடு மண்டலம்:

ஈரோடு, கோபி செட்டிப்பாளையம், நாமக்கல்  

இந்த மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப்பாளர்,  மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம்

16) சிவகங்கை மண்டலம்:

சிவகங்கை, காரைக்குடி, இராமநாதபுரம்.

ஆகிய மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப்பாளர், மண்டலத் தலைவர்  சாமி.திராவிடமணி

17) திண்டுக்கல் மண்டலம்:

திண்டுக்கல், பழனி, தேனி

18) மதுரை மண்டலம்:

மதுரை மாநகர், மதுரை புறநகர், விருதுநகர்

19) நெல்லை மண்டலம்:

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி

 இந்த மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப்பாளர், மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம்

ஆக திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் பரந்துபட்டு, தமிழ்நாடு முழுக்க சேரும் வகையில் 19 மண்டலங்கள், 65 மாவட்டங்கள் என நிர்வாக ரீதியாக ஆசிரியர் அவர்கள் பிரித்து வைத்துள்ளார்கள்.

அணிகளின் அணி வரிசை!

இந்த மாவட்டங்களில் திராவிடர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, வழக்குரைஞர் அணி, தொழிலாளர் அணி, விவசாய தொழிலாளர் அணி, மருத்துவரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி  போன்ற பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இவர்கள் ஒத்துழைப்பிலும் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகப்  பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந்தே இந்தப் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளைத் திறம்பட செய்ய இருக்கின்றனர்.

எத்தனை வகுப்புகள்! எத்தனைத் தலைப்புகள்!

மேற்கண்ட 19 மண்டலங்களிலும் பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதைக் கொஞ்சம் விரித்துப் பார்ப்போம்; அப்போது தான் நாமே மலைத்துப் போவோம்!

19 இடங்களில் 15 நாள்கள், ஆக 285 நாள்கள் தொடர்ந்து வகுப்பு நடக்க இருக்கிறது. ஆக 285 வகுப்புகள், 285 தலைப்புகள், 285 பேச்சாளர்கள். (ஒரு பேச்சாளரே  பலமுறை வகுப்பு எடுத்தாலும் நாள்கள் 285 தானே) ஒவ்வொரு பயிற்சி வகுப்பின் இறுதியிலும் தேர்வுகள் நடக்க இருக்கின்றன. அதற்கான சான்றிதழ்களும்  வழங்கப்படும்.

இந்த 285 வகுப்புகளும் 29 நாள்களில் நிகழ உள்ளன என்றால், நாளொன்றுக்கு 10 கூட்டங்களைத் தமிழ்நாடு சந்திக்க இருக்கிறது!

இந்தச் செய்திகளை எல்லாம் எழுதிசாதனைஎன்கிற வழக்கமான வார்த்தையைப் பயன்படுத்தாமல், வேறென்ன வார்த்தைகள் இருக்கிறது எனத் தேடிப் பார்க்கிறோம்!

பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்!

மாணவச் செல்வங்கள் பயன் பெறக்கூடிய இந்த அற்புதமான நிகழ்வைப் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) “பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்'' ஒருங்கிணைக்கிறது. இதன் இயக்குநர் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களும், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களும் இந்த ஊரடங்கு காலகட்டத்திலும், பணிகளை முடுக்கி வருகின்றனர்.

ஆசிரியரின் நிறைவு விழா பேருரை!

முத்தாய்ப்பாக இந்த 285 வகுப்புகளுக்கும் நிறைவு விழா வேண்டும் அல்லவா! மாணவர்களை உச்சி முகர்ந்துப் பாராட்ட வேண்டும் அல்லவா! அந்த வகையில் 5 பிரிவாக நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அவ்விழாக்களில் நம் ஆசிரியர் அவர்கள் உற்சாக உரை, பாராட்டுரை, பெருமை உரை, சாதனை உரை என... எப்படி வேண்டுமானாலும் தலைப்புப் போட்டுக் கொள்ளும் வகையில் பேருரை ஆற்ற இருக்கிறார்கள்.

அனைவரும் காத்திருப்போம்!

பகுத்தறிவுப் பணியில் பூத்திருப்போம்!

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image