கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் 250 கோடியில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை

 அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

சென்னை,ஜூன்9- தமிழ் நாடு முதல்வர் கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத் தில் அரசு பன்னோக்கு மருத்துவ மனை அமைக்க 250 கோடி ஒதுக்கி ஆணை பிறப் பித்துள்ளார். இவ்வா ணைக்கிணங்க நேற்று கிண்டி, கிங் இன்ஸ்ட்டியூட் மருத்துவமனை வளாகத் தில் மருத்துவமனை கட் டுவ தற்கு இடம் தேர்வு குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் ஆய்வு மேற் கொண்டார். பிறகு அமைச்சர் சுப்பிரமணி யன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக முதல்வர் கடந்த வாரம் வரலாற்று சிறப்புமிக்க கிண்டி, கிங் நோய் தடுப்பு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ரூ.250 கோடி செலவில் அமைப்பதற்கு திட்ட மிட்டு அறிவித்தார். தென் சென்னை பகுதியில் உள்ள மக்களுக்கு மிகப் பெரிய பரிசாக இம்மருத் துவமனை விரைவில் அமைய இருக்கிறது.

இம்மருத்துவமனை அமைவதற்கு கட்டட இடம் தேர்வு குறித்து ஆராய்வதற்காக நானும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் இப் பணி யில் ஈடுபட்டிருக்கிறோம்.  இம்மருத்துவமனைக்கு கூடுதல் இடங்கள் தேர்வு செய்து, இந்த ஆராய்ச்சி நிலையத்தில் புதிய மருத் துவமனை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்துள் ளோம். இம் மருத்துவ மனை அருகில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தை பொதுப் பணித் துறையினருக்கு அடை யாளம் காட்டப்பட்டுள் ளது. அவர்கள் முதல்வர் அறிவுறுத்தலை யேற்று அதற்கான வரைபடத்தை தயாரிப்பார்கள். பின்னர் முறைப்படி  முதல் அமைச்சர் அறிவிப்பார் என்றார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image