மோடியின் பொருளாதார கொள்கை 21 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளிவிட்டது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

மோடியின் பொருளாதார கொள்கை 21 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளிவிட்டது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சிவகங்கை, ஜூன் 12 மோடியின் தவறான பொருளாதார கொள்கை 21 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளிவிட்டது என்று .சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான .சிதம்பரம் நேற்று (11.6.2021) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

21 கோடி மக்கள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிப்பது போலாகும். இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கரோனா காலத்தில் மத்திய அரசின் அலட்சியத்தால் பண பரிமாற்றம் செய்யாததால் வருமானம் இழப்பு, வேலை இழப்பு, வேலை குறைப்பு மற்றும், சுய வேலைவாய்ப்புகள் அறவே நின்று போனதாலும், வர்த்தக நிறுவனங்கள் அடைப்பாலும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நடுத்தர வர்க்கத்தில் மேலடுக்கு, கீழடுக்கு என இரண்டு உண்டு. நான் கீழ் அடுக்கில் உள்ள 404 பேரை ஆய்வு செய்து ஆய்வின் அறிக்கையினை ஊடகங்களுக்கும் தந்திருக்கிறேன். கீழடுக்கு நடுத்தர வர்க்க மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு மேலே உயர்த்தப்பட்டனர். உலக வங்கியும், அய்.நா.வும் தனது அறிக்கையில் இதனை சொல்லி இருக்கிறது. இன்றைய ஆய்வில் கூறுவது 21 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுவிட்டனர். இதற்கு காரணம் மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைதான.

தடுப்பூசி தட்டுப்பாடு

தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணம், திட்டம் போட தெரியாத அரசு. நம் நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என கணக்கிட்டால் 90 கோடி பேருக்கு தடுப்பூசி போடவேண்டும். 90 கோடி பேருக்கு இருமுறை தடுப்பூசி போட 180 கோடி

இந்தியாவில் உள்ள இரு நிறுவனங்களும் 180 கோடி தடுப்பூசியை தயாரிப்பது கிடையாது. தயாரிக்கவும் முடியாது. ஒரு கம்பெனி ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 7 கோடிதான் தயாரித்துள்ளது. மற்றொரு நிறுவனம் ஒரு மாதத்திற்கு 2 கோடி தடுப்பூசிகளை தயாரிப்பதாக கூறுகின்றது. இரு நிறுவனங்களும் சேர்ந்து மாதம் 10 கோடி தடுப்பூசிகளை தயாரித்தாலும் கூட 6 மாதத்தில் 60 கோடி தடுப்பூசிகள் தான் கிடைக்கும். ஏற்கனவே நாட்டு மக்கள் தொகையில் 3.41 சதவீதம் பேருக்கு தான் இருமுறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கணக்கீடு செய்தால் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. மொத்தம் 90 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டிய நிலையில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது மீதி 85 கோடி பேருக்கு போடவேண்டும். அந்த 85 கோடி பேருக்கும் 170 கோடி தடுப்பூசி தேவை. ஆனால் இங்கு இரு நிறுவனங்களின் ஆண்டு முடிய உற்பத்தி 60 கோடியை தாண்டாது. 110 கோடி பற்றாக்குறை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment