2022 - உ.பி. தேர்தலும் பா.ஜ.க.வுக்குள் குடுமிப்பிடியும்

சாமியார் முதல்வர் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டில் 3036 துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது, இதில் 78 பேர் கொல்லப்பட்டனர், இதில் 62 பேர் இஸ்லாமியர்கள் 13 தாழ்த்தப்பட்டவர்கள், நான்கு பேர் மட்டுமே உயர்ஜாதியினர்.

உத்தரப் பிரதேசத்தில் தாக்கூர் எனப்படும் உயர்ஜாதியினர் தான் அதிக வன்முறை மற்றும் அராஜகத்தில் இறங்குவார்கள் என்பது பூலான் தேவி கொலை குறித்து விசாரணை நடத்திய அறிக்கையிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி இந்தக் கொலைகள் சாமியாரின் பழிவாங்கும் நடவடிக்கை என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

சாமியாரின் யுவ வாகினி என்ற அமைப்பு காவல்துறையினருடன் சேர்ந்து காவல்துறை வாகனத்திலேயே ரோந்து சென்று அவர் களுக்கு எதிரிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த் தப்பட்டவர்களின் சொத்துக்களை சூறையாடுவது, எதிர்கேள்வி கேட்டால் சுட்டுக்கொல்லுவது என தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தை வன்முறைக் காடாக்கி விட்டனர்.

பாரதிய ஜனதா ஆட்சியில் அதிகாரத்தின் துணை கிடைத் திருப்பதோடு, சிதறிக் கிடந்த ரவுடிக் கும்பல்கள் ஹிந்து யுவவாகினி, கோரக்சக் தள் போன்ற இயக்கங்களின் கீழ் அமைப்பு ரீதியில் ஒன்று திரட்டப்பட்டுள்ளனர்.

காவல் துறையைக் கொண்டு தான் ரோமியோ எதிர்ப்புப் படை ஒன்றை கட்டியுள்ளார் - பாரதிய ஜனதா முதல்வர் ஆதித்யநாத். இந்த படையின் பிரதானப் பணி, எங்கே யார் காதலிக்கிறார்கள் என்பதை மோப்பம் பிடித்துத் திரிவதாகும். கடந்த 27ஆம் தேதியன்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் ஆதித்யநாத், ரோமியோ எதிர்ப்புப் படை உருவாக்கப்பட்ட பின் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

சாமியார் ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரப் பிரதேசத்தில் பெண் களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் அதிக அளவு நடந்துள்ளன. அலகாபாத் நீதிமன்றமே சட்டத்தின் ஆட்சியா, காட்டாட்சியா என்று கேட்கும் அளவிற்கு மோசமான பாலியல்வன்கொடுமைகள் நடந்துள்ளன.

இதில் உன்னாவ் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் மீதான 17 வயது பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு!

இதில் சாட்சிகளை அழிக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்யவும் 7 முறை முயற்சி நடைபெற்றுள்ளது, ஒருமுறை இவர்கள் நீதிமன்றம் செல்லும் போது எண் பலகை இல்லாத லாரியைக் கொண்டு மோதியதில் அவர்கள் சென்ற கார் நொறுங்கியது, இதில் அவரது அம்மா, அவரது வழக்குரைஞர் மற்றும் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே மரணமடைந்தனர்,

பாதிக்கப்பட்டப் பெண் படுமோசமான நிலையில் காயமடைந்து ஒருமாதம் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், அப்போது கூட அங்குப் பணிபுரியும் ஒருவர் மூலமாக அவரைக் கொல்ல முயன்றார்கள்.

சமீபத்தில் நடந்த ஹத்ரஸ் நிகழ்வு மிகவும் கொடூரமானது. அவ்வூரிலேயே கல்லூரி வரை சென்று படித்துக்கொண்டு இருந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை அவ்வூரைச் சேர்ந்த சிலர் பாலியல் வன்கொடுமை செய்து, முதுகெலும்பை உடைத்து நாக்கைத் துண்டித்து உள்ளனர். சுமார் 3 வாரம் சிகிச்சைபெற்ற அவரிடம் வாக்குமூலம் வாங்காமலும் மருத்துவப் பரிசோதனை செய்யாமலும்  அலைக்கழிக்கப்பட்டது. இறுதியில் அலகாபாத் உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் இந்த வழக்கை பதிவு செய்தனர், ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் மரணமடைந்தார். அவரது உடலை உடற்கூராய்வு செய்யாமலும் அவரது பெற்றோரிடம்கூட காட்டா மலும் ஊருக்கு வெளியே உள்ள வயல்வெளியில் வைத்து எரித்து விட்டனர்.

சாமியார் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர். உத்தரப்பிரதேச தலைமைச்செயலகத்தில் பணி புரிந்த தாழ்த்தப்பட்ட பல அதிகாரிகள் வேறு வேறு ஊருக்கு தூக்கி எறியப்பட்டனர்.  சாமியார் அலுவலகம் வரும் போது தாழ்த்தப்பட்ட யாரையும் அவர் பார்த்துவிடக்கூடாது என்பதில் சாமியார் மிகவும் கவனமாக இருந்தார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு முதல்வர் நலத்திட்டம் வழங்குகிறார் என்ற பெயரில் வரிசையாக தாழ்த்தப்பட்டவர்களை உட்காரவைத்து ஒவ்வோருவர் பின்னாலும் ஒரு காவலர் நின்றுகொண்டு முதல்வரை இவர்கள் தொடக்கூடாத அளவு பார்த்துக்கொண்டனர். இது படங்களாகவே வெளிவந்தது,

அதே போல் முதல்வர் செல்லும் ஊரில் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி இருந்தால் அவர்களுக்கு சோப்பு, பவுடர் கொடுத்து குளித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லும் அவளவிற்கு அவர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.

மாட்டிறைச்சி தொடர்பான கொலை சாமியார் ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்துவிட்டது, 2019 ஆம் ஆண்டு குற்றவியல் பட்டியலில் மாட்டிறைச்சி தொடர் பான கொலைகளில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருந்தது; சுமார் 170-க்கும் மேற்பட்ட கொலைகள் மாட்டிறைச்சி கடத்தினார்கள் என்ற வதந்தியின் பெயரில் நடந்துள்ளது.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சரகத்தின் சார்பில் எடுத்த ரகசிய ஆய்வில் உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் மீது மக்கள் கடுமையான வெறுப்பில் உள்ளதாக ஆய்வறிக்கை கொடுத்தனர். இதனால் சாமியாரை அடுத்த முதல்வராக அறிவிக்க வேண்டாம் என்றும் சாமியாரை இனிமேல் பிரபலப்படுத்தவேண்டாம் என்றும் மோடி  - அமித்ஷா ஆகியோர் பாஜகவினருக்கு உத்தர விட்டுள்ளனர். இதன் காரணமாக சமீபத்தில் நடந்த சாமியார் பிறந்த நாளுக்கு மோடி உட்பட முக்கிய பாஜகவினர் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை.

இதனால் உத்தரப் பிரதேச பாஜக அலுவலகம் மற்றும் இணையதளங்களில் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா படங்கள் அகற்றப்பட்டுள்ளன.

சில மாதங்களுக்குமுன் நடைபெற்ற .பி. உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பாக வாரணாசி, அயோத்தியா தொகுதிக்கு உட்பட இடங்களில் பா... படுதோல்வி அடைந்தது.

இவ்வளவுக்குப் பிறகும் சாமியார் ஆதித்யநாத்துதான் அடுத்த தேர்தலிலும் முதல்வருக்கான வேட்பாளர் என்பதில் பிடிவாதமாக உள்ளது ஆர்.எஸ்.எஸ்.

அடுத்து .பி.யில் பா...வின் உள்கட்சிக் குடுமிப்பிடி தெருச் சண்டையாக நடக்கப்போவதைக் காணலாம்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image