பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 சென்னை,ஜூன்9- அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் பிளஸ் 1 மா ணவர்சேர்க் கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியி டப்பட்டுள்ளன. கரோனா காரணமாக ஒவ்வொரு பாடப்பிரிவிலும் கூடுதலாக 15 சதவீதம் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1 வகுப்பு களை ஜுன் 3ஆவது வாரத்தில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைப் பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாண வர்களின் எண்ணிக் கைக்கு உட்பட்டு மாண வர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும்நிலையில் அவர்களின் விருப்பத் துக்கு ஏற்பப் பாடப்பிரிவு களை ஒதுக்கீடு செய்ய லாம்.

அனுமதிக்கப்பட் டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக மாணவர்களை சேர்க் கலாம்.

மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்தப் பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ அச்சூழ்நிலையில், அதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப் பிரிவோடு தொடர்பு டைய கீழ்நிலை வகுப்புப் பாடங்களில் இருந்து கொள்குறிவகை தேர்வு நடத்தி (மொத்தம் 50 வினாக்கள்) அந்த மதிப் பெண் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.

பிளஸ் 1 மாணவர் களுக்கு ஜுன் 3ஆவது வாரத்தில் இருந்து அப் போது, கரோனா குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்பு களை தொடங்கலாம்.

2021-2022ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 மாண வர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி, உயர் தொழில்நுட்ப ஆய் வகம் மற்றும் தொலைத் தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்தத் தொடங்கலாம். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image