கரோனா தடுப்புப் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு ஊக்கத் தொகைக்காக ரூ.160 கோடி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை, ஜூன் 9 கரோனா தொடர்பான பணிகளில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் காலமுறை ஊதியத்துடன் கூடிய அரசுப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, கரோனா தடுப்பு தொடர் பணியில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஈடுபட்டுள்ள மருத் துவர், பிற பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ.160 கோடி ஒதுக்கி அரசாணை பிறப் பிக்கப்பட்டுள்ளது.

அலோபதி மற்றும் இந்திய முறை மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம், பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.15 ஆயிரம், செவிலியருக்கு ரூ.20 ஆயிரம், கிராம மற்றும் பகுதி சுகாதார செவிலியர், 108 அவசர ஊர்தி, 104 அமரர் ஊர்தி பணி யாளர்கள், சுகாதாரம் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான பணியாளர்கள், மருத் துவம் சாரா பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம், புற ஆதாரமுறையில் பணியமர்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர் களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்கள், அவசர மருத்துவ ஊர்திகள், கரோனா கவனிப்பு மய்யம், காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மாதிரி சேகரிப்பு மய்யங்கள் உள்ளிட்ட மய்யங்களில் பணியாற்றுவோர், நேரடியாக தொற்றாளர்களுடன் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் தகுதி வாய்ந்தவர்களை இனம்கண்டு, நிதித் தொகுப்பு வழங்க அந்தந்த துறை இயக்குநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த நிதித் தொகுப்பு வழங்க ரூ.160 கோடிஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image