ஏட்டுத் திக்குகளிலிருந்து...

11.6.2021

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது பாஜக கட்சி தலைமை அதிருப்தியில் இருந்த நிலையில் அவர், அமித்ஷாவை டில்லியில் சந்தித்தார். இன்று பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

* 1962 தேசவிரோத சட்டத்தை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொன்னாலும், அரசுகள் தொடர்ந்து அச்சட்ட்த்தை தவறாகப் பயன்படுத்தி வருவதை நீதிமன்றம் முதலில் தடுக்க வேண்டும் என மூத்த ஊடகவிய லாளர் கரன் தாப்பர் குறிப்பிட்டுள்ளார்.

* கரோனா பரவல் அதிகரித்து வருவதால், பூரி ஜெகந் நாதர் ரத யாத்திரையை இந்த ஆண்டும் நடத்துவதற்கு ஒடிசா அரசு தடை விதித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 11 உயர் நீதிமன்றங்களில் 40 விழுக்காட்டிற்கும் மேல் நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது. இதில் பாட்னா நீதிமன்றம் 62 விழுக்காடு என முன்னணியில் உள்ளது.

தி இந்து:

* தனது தொகுதி மக்களையும், கட்சி உறுப்பினர்களையும் சந்திக்க தடை விதித்த லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கே.படேல் மீது உரிமை மீறல் குற்றச்சாட்டை சிபிஅய் (எம்) மாநிலங் களவை உறுப்பினர் பினாய் விஸ்வாம் மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம் மூலம் எழுப்பியுள்ளார்.

தி டெலிகிராப்:

* மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை எனக் கூறி பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்கு மாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி .கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு உறுப்பினர்களை அமைத்து முதல்வர் மு..ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இந்த குழு உரிய புள்ளி விவரங் களை ஆய்வு செய்து தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திட தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்துக்குள் அரசுக்கு அளிக்கும் என்றும் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- குடந்தை கருணா

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image