நியாய விலைக் கடைகள் காலை, மாலை இரு வேளையும் செயல்படும் நிவாரணம் வழங்க ஜூன் 11 முதல் டோக்கன் வழங்க அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 9- தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகள் காலை 9 முதல் 12.30 வரையும் பிற்பகல் 2 முதல் 5 மணிவரையும் செயல்படும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ள நிலையில், காலை 8 முதல் 12 மணிவரை நியாய விலைக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் நேற்று முதல் தளர் வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், நியாய விலைக்கடைகள் இயங் கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை துணை ஆணையர் களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழ்நாட்டில் தளர்வுகளு டன் கூடிய ஊரடங்கு வரும் ஜூன் 14ஆம் தேதி வரை நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி, மளிகைக் கடைகள் மற் றும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை நிலை யங்கள் காலை 6 முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக் கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நியாய விலைக்கடைகள், அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரையும் செயல் படும். இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடை முறையில் இருக்கும்.

மேலும், கரோனா நிவா ரணத்தின் 2ஆம் தவணைத் தொகை ரூ.2000 மற்றும் 14 பொருள்கள் அடங்கிய மளிகைப்பொருள் தொகுப்பு ஆகியவை வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வரும் ஜூன் 11 முதல் 14ஆம் தேதிவரை கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அரிசி அட்டைதாரர் களுக்கு டோக்கன் வழங்க வேண்டும். அதே நேரம் ஜூன் 11 முதல் 14 வரை காலை நேரத்தில் அத்தியாவசியப் பொருள்களை வழக்கம் போல் குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image