அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினருக்கு 100 நாள்களில் வேலை

தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் நன்றி

சென்னை,ஜூன்8- தமிழ்நாடு அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் வா.ரங்க நாதன் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளதாவது,

100 நாள்களில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக்கப்படுவர்  என்ற  தமிழ்நாடு அரசின் இந்து சமய  அறநிலையத் துறையின் அறிவிப்பை மனமார வரவேற்கி றோம். தமிழ்நாடு முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர் களுக்கும்  அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான கருவறைத் தீண்டாமையை அகற்றும் விதமாக மதுரை மீனாட்சியம்மன், சிறீ ரங்கம் ரெங்கநாதர், பழனி, திருச் செந்தூர் முருகன் , சென்னை கபாலீசுவரர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் களில் அர்ச்சக மாணவர்கள் நியமனம் அமைய வேண்டும்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பணி என்பது பிறப்பால் அனைவரும் சமம் என்பதை சட் டப்படி உறுதி செய்வது. 1971இல்  தந்தை பெரியார் தொடங்கி,  முத்தமிழ் அறிஞர் கலைஞர் வளர்த்த சமூக நீதிக் கோரிக்கை, தமிழக முதல்வர்  தளபதி மு.. ஸ்டாலின்  அவர்களால்  2021இல் முழுமை அடைய வேண்டும்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்  என்ற சமூக நீதிக் காவலர் கலைஞரின் திட்டத்தில் பயின்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 100 நாள்களில் பணிநியமனம் உறுதி என்று   இந்து சமய அறநிலையத்துறை அமைச் சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள் ளார்.  திராவிட இயக்கத்தின் 100 ஆண்டுகால சமூக நீதிப் பயணத்தில் இவ்வறிவுப்பு ஓர் மைல் கல்லாகும். கடவுளின் படைப்பில் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்வது மட்டுமல்லாது, அரசியல் சட்டத்தின் உயரிய நோக்கமான சமத்துவ சமூகத்தை அடையும் சட்டப்பூர்வ முயற்சி இது. தனக்கு இந்த சாதியைச் சேர்ந்தோர் பூசை செய்தால்தான் மகிழ்வேன் என்று கடவுள் ஒருபோதும் சொல்ல வில்லை. கடவுள் அனைத்து மக் களையும் தன் பிள்ளைகளாகவே பாவிக்கிறார்.மிகவும் குறிப்பாக அர்ச்சகர் பணி என்பது அரசுப் பணி ஆகும்.  அரசுப் பணியில்  பொது அறிவிப்பு, தேர்வு, நேர் காணல் என்ற முறையே பின் பற்றப்படுகிறது. பரம்பரை வழி அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன பின்பும் இன்று வரை மதுரை மீனாட்சி யம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில்கள், சிறீரங்கம் அரங்கநாதர், திருவண்ணாமலை அருணாச் சலேசுவரர் கோயில் களில் அர்ச்சகர் நியமனம் பரம் பரை, வாரி சுரிமை அடிப்படையில்தான் நடக்கிறது. இது அர சியல் சட்டம், உச்சநீதிமன்ற தீர்ப் புகளுக்கு எதிரானது.சபரிமலை வழக்கில் மரபு, பழக்கம் என்ற பெயரில் பெண்களை கோயிலுக் குள் வர விடாமல் தடுப்பது தீண்டாமை என்று கண்டித்தது உச்சநீதி மன்றம்.

தமிழகத்தில் அரசுப் பயிற்சிப் பள்ளியில் ஆகமம் கற்று, தீட்சை பெற்ற இந்து மதத்தின் கவுண்டர், தேவர், வன்னியர், முதலியார், யாதவர், தேவேந்திரர், ஆதிதிரா விடர், அருந்ததியர், பார்ப்பனர் உள்ளிட்ட அனைத்து ஜாதி மாண வர்களை கடந்த .தி.மு.. அரசு கண்டுகொள்ளவில்லை. மாணவர் களாகிய நாங்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்ய வழக்குரைஞர்கள் இராஜீ, வாஞ்சிநாதன் ஆகியோர் உதவியுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீதிகளிலும், நீதிமன்றத் திலும் போராடி வந்தோம்.எதுவும் நடக்கவில்லை.ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள சமூக நீதி அரசு, கரோனா பேரிடர் காலத் திலும் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமன அறிவிப்பு வெளியிட்டி ருப்பது சமத்துவத்தின்பால் தமிழக அரசு கொண்டிருக்கும் அக் கறையை வெளிப்படுத்துகிறது. பார் போற்றும் தி.மு.. ஆட்சி இன்னும் பல சாதனைகள் நிகழ்த் தட்டும்! சமத்துவக் கொடியை உயர்த்திப் பிடித்து கருவறைத் தீண்டாமையை ஒழிக்கட்டும்!

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image