தி.மு.க. தலைவருக்கு குவியும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்

சென்னை, மே 4- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்கிறார்தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளையும், பாராட் டுகளையும் தெரிவித்துள்ளதுடன் தமிழக வாக்காளர் களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான 16ஆவது பொதுத் தேர்தலில், தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறோம்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்க இருக்கும் திராவிட முன் னேற்றக் கழகத்திற்கும், அதன் தலைவர் மு..ஸ்டாலின் அவர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். முன்னெப்போதுமில்லாத கடன் சுமையைத் தாங்கி நிற்கும் தமிழகத்தை மறுகட்டமைப்பு செய்கிற பணியோடு, உடனடியாக அச்சுறுத்துகிற கரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய கடுமையான சூழ லில், மு..ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்கிறார்.

தனது நீண்ட அனுபவத்தாலும், நிர்வாகத் திறமையினாலும், இவற்றைச் சமாளித்து தமிழக மக்களின் நலன் களைக் காக்கும் பணியில் அவர் முழு வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து, தேர்தல் பணியாற்றிய தோழமைக் கட்சிகளுக்கும், வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் எனது நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.

கே.பாலகிருஷ்ணன்

இந்திய கம்யூனிஸ்ட் மர்க்சிஸ்ட் கட்சி மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

நடந்து முடிந்த 17ஆவது சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப் பட்டு இருக்கின்றன. மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற அணிக்கு மக்கள் மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் மத்திய பாஜகவின்  எடுபிடி அரசாகவும் ஊழல் மலிந்த அரசாகவும் இருந்த அதிமுக ஆட்சி அகற் றப்பட்டதோடு, வகுப்புவாத சக்திகளின் ஆதரவோடு போட்டியிட்ட அதிமுக அணி  தோற்கடிக்கப்பட்டு ஒரு புதிய ஆட்சியை மலரச் செய்ய மக்கள் வாக்களித்திருக் கிறார்கள். தி.மு.. தலைமையில் புதிய ஆட்சி அமைய உள்ளது.  திமுக தலைமையிலான  சிபிஅய்(எம்), காங்கிரஸ், சிபிஅய், விசிக, மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளின் வேட்பாளர்களையும் மக்கள்  வெற்றிபெறச் செய்துள்ளனர். இந்த ஆட்சி மாற்றத்தை அளித்த தமிழக வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

தேர்தல் அறிவித்த நாளிலிருந்து இந்த அணியின் வெற்றிக்கு பாடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் திமுக தலைமையிலான தோழமைக் கட்சி களின்  தலைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

கோவிட் பெருந்தொற்று சூழலையும்,  கடுமையான பொருளாதார நெருக்கடியையும், வாழ்வாதார பிரச்சினை களையும்  மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் தலைமையில் மலரப் போகிற  புதிய ஆட்சி இந்தச் சவால்களை மக்கள் ஆதர வோடு  நிறைவேற்றுவதற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தி.மு.. தலைவர் மு.. ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்தியில் கூறியதாவது:

தமிழகத்தில் கலைஞர் நடத்திய நல்லாட்சிக்கு பத்து ஆண்டுகளுக்கு பிறகு   தொடர்வதற்கான வாய்ப்பை தமிழக மக்கள் தி.மு.. தலைவர் மு.. ஸ்டாலின் அவர்க ளுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதற்காக தமிழக மக்க ளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும்.

தமிழக மக்களை சரியாகத் தெரிந்தவர்! அவர்களின் உள்ள உணர்வுகளை நன்கு புரிந்தவர். அவர்களுடைய இதயங்களில் இருப்பதை யூகித்து, அதற்குரிய பரிகாரத்தை தேடித் தருவதில் அவருக்குள்ள  நிர்வாகத் திறமையும் அனுபவமும் நிச்சயமாக நல்வழி காட்டும்.

தமிழகத்தின் வரலாறு, சுய ஆட்சிக் கோட்பாடு, அறிவியல் கண்ணோட்டம், மத பாகுபாடு இல்லாத ஒரு பொதுநோக்கு போன்றவற்றில் எல்லோருக்கும் முன் உதாரணமாக திகழ்பவர் மு..ஸ்டாலின். தமிழ்நாட்டில் நாடும் ஏடும் போற்றும்படியான நல்லாட்சியை நிச்சயமாக தருவார் என்று எல்லோரும் நம்புகிறோம்.

டாக்டர். வி.ஜி. சந்தோசம்

திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலினுக்கு டாக்டர். வி.ஜி.சந்தோசம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: டாக்டர். கலைஞர் அவர்களின்  வீர மகனான திமுக தலைவர் மு. . ஸ்டாலின் அவர்கட்கு பாராட்டு. தமிழக மக்களின் தமிழ் பிள்ளையாகவும், மக்களுக்காக பணியாற்றும் மகத்தான பணியில் தாங்கள் ஈடுபட்டு, இணையற்ற தமிழக முதலமைச்சராகத் திகழ்ந்து, ஒரு பொற்கால ஆட்சி  மலர வைத்திட வேண்டும் என்றும், தமிழுக்கும் தமிழ் மண்ணின் பெருமைக்கும், தாங்கள் தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும் என்றும் நான் உங்களை உளமார வாழ்த்துகிறேன். வணக்கம்! விஜிபி குடும்பத்தின் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றேன்.

பேராசிரியர் அருணன்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன், .உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற, முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பெருவாரியான அளவில் வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

 தமிழகத்திலுள்ள மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் அமைப்புகள் ,சிறுபான்மை அமைப்புகள், தாழ்த்தப்பட்ட வர்களுக்கான அமைப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியையும் அதற்கு துணை போகின்ற அதிமுக உள்ளிட்ட கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டுமென தமிழக மக்கள் ஒற்றுமை மேடை விழைந்தது .

அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் மத வெறி சக்திக ளுக்கு இடம் தராமல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை பெருமளவில் வெற்றி பெறச் செய்து  மதவாத கட்சிக்கு துணை நின்ற அதிமுக ஆட்சியை பதவி இழக்க செய்துள்ளனர்.

 தமிழக மக்களின் இந்த உயரிய நோக்கத்தை உணர்ந்து எதிர்காலத்திலும் மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் இயக்கங் கள் ஒன்றிணைந்து தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் மற்றும் அதற்குத் துணை போகின்ற அமைப்புகள் தமிழகத் தில் காலூன்றாத வகையில் ஒன்றிணைந்து போராட வேண்டுமென தமிழக மக்கள்  ஒற்றுமை மேடை அறை கூவல் விடுக்கிறது.

திமுக ஆட்சி தமிழகத்தில் மக்கள் ஒற்றுமை காத்திடவும் மதநல்லிணக்கம் பேணிடவும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை  மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது

தி.மு.. ஆட்சி மேற்கொள்ளும் அனைத்து மத நல்லி ணக்க நடவடிக்கைகளுக்கும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை துணை நிற்கும் என இத்தருணத்தில் உறுதி அளிக்கிறது.

இரா.அதியமான்

ஆதித்தமிழர் பேரவை சார்பில் அதன் நிறுவனர் தலை வர் இரா.அதியமான் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கும், சமூக நீதி சமத்துவம் கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் நல்லாட்சியையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்விற்கு நம்பிக்கை தரும் ஆட்சியையும்   வழங்கவிருக்கும் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டலின் அவர்களுக்கும், உறக்கத்தை தள்ளி வைத்து உற்சாகத்தோடு களப்பணி செய்திட்ட அத்துணை பேருக்கும் தமிழக மக்கள் வழங்கிய இந்த வரலாற்று சிறப்பு மிக்க மகத்தான தீர்ப்பிற்கு வாழ்த்துகளையும் தமிழக மக்களுக்கு நன்றியினையும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நடைபெற்று முடிந்த திராவிட ஆரியப் போரில் திராவிடம் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்று உள்ளது என்பது மிக மிக முக்கியமானது. தமிழகம் தந்தை பெரியார் மண்  என்பதை மீண்டும் தமிழக மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். அடிமை ஆட்சிக்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள். அடிமை அதிமுக பாசிச பாஜக வின் ஆயிரமாயிரம் அவதூறுகளையும் சூழ்ச்சிகளையும் வென்று தனிப் பெரும்பான்மையோடு திமுகவை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளார்கள்.

இந்த வெற்றி எளிதில் கிடைத்ததல்ல. சமூக நீதிக்கான வெற்றி, மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான வெற்றி. ஒடுக்கப்பட்ட மக்களின் சமத்துவத்திற்கான வெற்றி. தளபதி மு..ஸ்டாலின் அவர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக தமிழக மக்கள் வழங்கியிருக்கிறார் கள். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்த வேண்டும்.

சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, தமிழர் உரிமை களை பாதுகாத்து திராவிடத்தின் தலைமகன் தந்தை பெரியார் வழியில் அறிஞர் அண்ணா வழியில் டாக்டர் கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி தமிழகம் தலை நிமிர தளபதி மு..ஸ்டாலின் தலைமையில் மிகச்சிறந்த நல் லாட்சி நடந்திட ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் நெஞ் சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் அதன் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி விடுத் துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியை திறம்பட வழி நடத்தி வெற்றி கண்டிட்ட தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கும் கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கும், அயராது உழைத்த தோழர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தளபதி தலைமையில் அமைய இருக்கும் திராவிடர் ஆட்சி, சமூக நீதி, மதச்சார்பின்மையை பாதுகாத்திடவும், மாநில சுயாட்சியை மீட்டிடவும் பாடுபடும் என்பது உறுதி. திராவிடச் சித்தாந்தம் தமிழகத்தில் மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்து இந்தியாவிற்கே வழிகாட்டும். திராவிடம் வெல்லும்.

பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில் அதன் பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு,

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்"

என்ற குறள் வழியில் தாங்கள் பெற்றிருக்கும் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது மகிழ்ச்சி யையும், வாழ்த்துகளையும்  தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் நாட்டைக் கடந்து, அகில இந்திய அளவில் அர சியல் களம் காண, போடப்பட்டிருக்கும் அடித்தளமாகவே தங்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள வெற்றியைப் பார்க்கிறோம்.

பேராசிரியர் நி. ஹரகோபல், பேராசிரியர் அனில்சட் கோபால் உள்ளிட்ட உலகறிந்த கல்வியாளர்கள் தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு, தங்களின் தலை மையில் நல்லாட்சி மாநிலத்தில் அமைவதுடன், அகில இந்திய அளவில் சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்திடாமல், மக்களாட்சி மாண்பிற்கு உட்பட்ட சட்டத்தின் ஆட்சி அமைந்திட தொடர்பணியைத் தாங்கள் ஆற்ற வேண்டி யுள்ளதைச் சுட்டிக்காட்டி உள்ளனர்.

மாநிலத்தில் பல்வேறு சிக்கல்கள் தங்களின் உடனடிக் கவனம் பெற வேண்டிய அவசியம் இருந்தாலும், அவற் றுள் சுகாதாரமும், கல்வியும் போர்க்கால அடிப்படையில் கவனம் பெறவேண்டிய துறைகளாக உள்ளன.

ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்க வாய்ப்புள்ள இந்த இரண்டு துறைகளிலும், பணி நியமனம், பணி மாறுதல் தொடங்கி பலவற்றுக்கும்  ஊழலுக்கு இடம் தராத, வெளிப் படைத்தன்மையுடன்  அனைத்து செயல்பாடு களும் நடந்திட உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அடுத்தக் கல்வி ஆண்டு தொடங்குகிறது.

மாணவர்கள் மன உளைச்சல் இல்லாமல் மகிழ்ச்சியாக, கல்வி ஆண்டு தொடங்கவும், தேசியக் கல்விக் கொள்கை 2020இன் பேராபத்திலிருந்து நம் மாநிலத்தைக் காத்திட, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அதற்குரிய மாநிலக் கல்வி ஆணையம் அமைந்திட உரிய ஆணையைத் தாங்கள் பதவி ஏற்ற முதல் நாளே பிறப்பிக்க வேண்டும் என்று இந்தியாவே எதிர்பார்க்கிறது.

3.5.2021 அன்றைய நாளிதழ்களின் தலையங்கம், தங் கள்மீது மாநில மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் விளக்கி, தங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாநில முதல்வர் பதவி ஏற்பதற்கு முன்பாக இத்துணை மகிழ்ச்சியுடன் இதற்கு முன் நாளிதழ்கள் தலையங்கத்தில் எழுதியதாக நான் அறிந்திடவில்லை.

ஓர் அசாதாரணமான சூழலில், தங்களின் வெற்றி அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இத்தலை யங்கங்கள் விளக்குகின்றன. 

ஒவ்வொரு பெற்றோரும், தன் குழந்தையின் வாழ்க் கையில் ஒளி ஏற்றப் போகும் முதல்வராகத் தங்களைப் பார்க்கின்றனர். 

"உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து"

என்ற குறள் வழியில் மாநில உரிமைகளைக் காத்து, தமிழ் நாடு இந்தியாவிற்கே முன் உதாரணமாகத்  திகழ்ந்திடும் வகையில் நல்லாட்சியை வழங்கிட நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments