ஆசிரியருக்குக் கடிதம்! புகழுரை அல்ல மகிழுரை!

எல்லோரும் "ஆட்சி" என்றார்கள். இவரோ "மீட்சி" என்றார், காட்சிகள் மாறி யது! எல்லோரும் "வெற்றிடம்" என்றார்கள். இவரோ "கற்றிடம்" என்றார். சமூகநீதி பாடத்தை சலிக்காமல் கற்று கற்று தந்தார், களங்கள் கைவசமாயின! எல்லோரும் "தேர்தல்" என்றார்கள். இவரோ இனமானப் போர் என்றே சுட்டிக்காட்டி கட்டுவித்தார், தேறுதல் பெற்றோம்.

ஆம். இவர் தமிழர் தலைவர்! "தமிழர் தலைவர்" என்பது வெறும் வெற்றுச் சொற்கள் அல்ல...  தமிழர் தலைவர் என்பது தகுதியின்பாற் பட்டது.  தமிழ்நாட்டில் இப்போது வேதிவினை (Chemical Reaction) போல நீதி வினையொன்று நடந்து முடிந்தது.திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்அவர்களின் 77 ஆண்டு கால பழுத்த சமூகநீதி அனுபவமும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதியின் தளராத உழைப்பும் சேர்ந்து நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் நிகழ்கால வெற்றியாக "நீதிவினை" புரிந்தது.

அதனால் தான் சொல்கிறோம். தமிழர் தலைவர் என்பது புகழுரைச் சொற்களல்ல... புரிதலுடன் உரைக்கும் சொற்கள்!

நிற்க, அந்த வினையின் விளைவுகள் கைமேல் பலன்களாய் சமத்துவ சமூகநீதித் தடத்தில்...

அடுப்பூதுங்கள்,படிக்கக்கூடாது என்றார் கள் - கலைஞர் பஸ் பாஸ் (Bus Pass) தந்தார். படிதாண்டக்கூடாது என்ற காலம் தாண்டி விட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இலவசப் பயணம் தந்தார்.  வருமானம் தேடி தினக்கூலிகளாக நகரங்களுக்கு அன்றாடம் வருவோரும் போவோரும், விவசாய விளைபொருட்களை விற்றுக்கொள்ள வருவோருமாகிய பல்லாயிரக்கணக்கான பெண்கள் போக வர அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல் அரசே உதவிக்கரம் நீட்டும் அற்புதத் திட்டத்தால் எல்லையற்ற மகிழ்ச்சி எம் போன்ற பெண்குலத்திற்கு! (சிற்றூரிலிருந்து பேருந்தில் நகரத்துக்கு வந்து படித்த பழைய பாசத்தில் கூடுதல் மகிழ்வு எனக்கும்) முதலமைச்சர் ஆனதுமே முத்து முத்தான அறிவிப்புகள் கொத்து  கொத்தாக! பெரியார் கொள்கைகள் மெல்ல இனி ஆளும்! "தமிழ்நாடு மாடல்" என்று ஊருலகு பேசும்.

ஆதலாலே தலைதாழ்ந்த நன்றி எங்கள் தமிழர் தலைவருக்கு!

தொற்றுக் காலத்திலும் தொடர்ந்த உழைப்பிற்கு!

தொற்றிக் கொள்வோம் தமிழர்களாகிய நாங்கள்  உங்களை காலம் முழுக்கவும்!


- கவிதா,

திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி 

தலைவர்

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image