ஒற்றைப் பத்தி : கடவுளை மற - மனிதனை நினை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 28, 2021

ஒற்றைப் பத்தி : கடவுளை மற - மனிதனை நினை!

பால ராமனுக்குக் கரோனா தடுப்பூசி போடு கிறார்கள் இரு காவி வேட்டி சாமியார்கள்.

ராமநாமத்தை ஜெபித் தால் கரோனா பறந்தே ஓடிடும் என்று சொல் லுவோர் - அந்த ராம னுக்கே கரோனா தொற்றுப் பரவாமல் இருக்க தடுப்பூசி போடுகிறார்கள்.

கோவாக்சினா, கோவி ஷீல்டா அல்லது நாத்திக நாடான ருசியாவின் ஸ்புட் னிக்கா? எது என்று தெரிய வில்லை.

பூரி ஜெகந்நாதன் கோயிலில் ஜெகந்நாத னுக்கு நாள்தோறும் டாக்டர் பரிசோதனை செய்கிறார்  - கரோனா தொற்று இருக்கா? ஜல தோஷம் பிடிச்சிருக்கா? மூச்சுவிட சிரமம் இருக்கா, ஜுரம் இருக்கா, ஆக்சிஜன் லெவல் என்ன?  என்ற சோதனைகளாக இருக் கலாம்.

கடவுள் மனுஷனைக் காப்பாற்றுவார் என்றால், இங்கே கடவுளை மனு ஷர்கள் காப்பாற்றிக் கொண்டு இருப்பதுதான் படுதமாஷ்!

கடவுளுக்குச் சர்வ சக்தி உண்டு என்று சொல் லுபவர்கள், கடவுளுக்கு வைத்தியம் செய்கிறார்கள் - கடவுளுக்குத் தடுப்பூசி போடுகிறார்கள் என்றால் உண்மையிலேயே கட வுளை கலாய்க்கிறவர்கள், கிண்டல் கேலி செய்ப வர்கள் யார்?

கடவுளுக்குச் சக்தி யில்லை என்று கடவுள் பக்தர்களே இதன் மூலம் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று தானே பொருள்.

கடவுள் இல்லை என்று சொன்னால் கோபப்படு வோர் கடைசியில் தந்தை பெரியார் சொன்ன "கடவுளை மற - மனிதனை நினை!" என்ற தத்துவத் திற்குத் தானே வந்து சேர்ந்துள்ளனர்.

- மயிலாடன்

No comments:

Post a Comment