விடுதலை தொடர் சங்கிலியயை பெருக்குவோம் தமிழர் தலைவர் ஆசிரியரின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுப்போம்

கழக தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள்

கோவை, மேட்டுப்பாளையம், நீலமலை, தாராபுரம், கரூர், திருச்சி, லால்குடி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநில, மண்டல,மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக அனைத்து அணிகளை சார்ந்த கழகப்பொறுப் பாளர்கள் , தோழர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கழக இளைஞரணி பொறுப்பாளர் களுக்கு அன்பான வேண்டுகோள்!

கரோனா பெருந்தொற்று பேராபத்தால் அரசு பொது முடக்கம் அறிவித்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளதால்  வழக்கமான விடுதலை விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மாற்றாக விடுதலை பிடிஎஃப் வடிவில் பல்லாயிரக்கணக் கானவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி, சமுதாய இயக்க பிறமுகர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர்கள் என பல தரப்பட்ட மக்களிடம்விடுதலையை கொண்டு சேர்க்கும் வகையில் தங்களிடம் உள்ள தொலைபேசி வாட்ஸ்அப் எண்களுக்கு (பிராட்காஸ்ட்) குரூப் அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித் தனியாகவும் தாங்கள் இடம்பெற்றுள்ள வாட்ஸ்அப் குரூப்களிலும் ஒவ்வொரு நாலும்நேரம் ஒதுக்கி விடுதலையை அனுப்பிட வேண்டுகிறேன்.

தமிழர் தலைவரின் அன்பான வேண்டுகோளை ஏற்று பல லட்சம் பேரிடம் விடுதலையை கொண்டு சேர்ப்போம்விடுதலை தொரடர் சங்கிலியைபெருக்குவோம். ஆசிரியர் அவர்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்போம்

இந்த முறையில்  தனித்தனியாக எத்தனை பேருக்கு அனுப்புகிறீர்கள். எத்தனை குரூப்பில் அனுப்புகிறீர்கள்? என்ற விவரத்தை எனக்கு அனுப்பிட வேண்டுகிறேன்.   

ஒவ்வொரும் அனுப்பும் எண்ணிக்கையை தினமும் தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களுக்கும். கழகப் பொதுச் செயலாளர்  வீஅன்புராஜ் அவர்களுக்கும் அனுப்பிட  பணித்துள்ளார்கள் என்பதையும் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி


அன்புடன்

இரா.ஜெயக்குமார்

பொதுச்செயலாளர்

திராவிடர் கழகம்

வாட்ஸ் அப் எண்.9842598743

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image