தமிழக முதலமைச்சருக்கு பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு வாழ்த்து

சென்னை, மே13- அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் அதன் பொதுச்செயலாளர்

கோ.கருணாநிதி  தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தங்கள் தலைமையிலான திராவிடர் ஆட்சிக்கு, எமது அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும், மகிழ்வையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் மிக முக்கியமான அய்ந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளீர்கள்.

 1. அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவர்க்கும் ரூ.4000 (உடன் இந்த மாதமே ரூ.2000).

2. நகரப் பேருந்துகளில் மகளிர்க்கு கட்டணமில்லா பயணச் சலுகை

3. ஆவின் பால் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்யப்படும்.

4. கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறவர்களின் சிகிச்சைக் கட்டணத்தை மாநில அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கும்..

5. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறை.

 மேற்குறிப்பிட்ட அறிவிப்புகள், ‘தாயினும் சாலப் பரிந்துஅடித்தட்டு மக்களின் நெஞ்சில் ஒளியைப் பெருக்கி தேனைச் சொரிந்துள்ளது போன்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.

 சமூக நீதி, மதசார்பின்மை, மாநில சுயாட்சி எனும் திராவிடர் இயக்கத்தின் அடிநாதக் கொள்கையை நீதிக்கட்சியின் வழித் தோன்றல்களாக அறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் தந்தை பெரியார் வழி நின்று தமது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றிட பாடுபட்டனர்.

 அவர்களது அடியொட்டி, தாங்களும் சிறப்பான ஆட்சியைத் தமிழகத்திற்கு அளித்து, இந்தியாவின் முதன்மை மாநிலமாக, அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக, அனைத்தும் அனைவர்க்கும் என்ற  இலக்கை நோக்கி வீறு நடைபோடும் மாநிலமாக தமிழகம் விளங்கிடும் என்பதில் பெருத்த நம்பிக்கையை விதைத்துள்ளீர்கள்.தங்களது அயராத உழைப்பிற்கும் நம்பிக்கைக்கும், எமது கூட்டமைப்பு, என்றும் துணை நிற்கும். திராவிடம் வெல்லும்.

இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படைப்பாளர்களுக்கான சமூக ஊடக தளம் தொடக்கம்

சென்னை, மே 13, படைப்பாளர்கள் கணினி விசைப்பலகை பயன்படுத்தி தட்டச்சு செய்யாமல் உள்ளடக்கத்தை உருவாக்கும் குக்கூ (ளீஷீஷீ) இந்திய மொழிகளுக்கானடாக்டு டைப்என்ற அம்சம் தொடங்கப்பட்டுள்ளது.

பயனர்கள் ஒரு பொத்தானைக் கிளிக் செய்து தொலைப்பேசியில் தங்கள் எண்ணங்களை ஆணையிடலாம் மற்றும் சொற்கள் தானாகவே உருவாக்கும் திரையில் காண்பிக்கப்படும் அனைத்தும் விசைப்பலகை பயன்படுத்தாமல் தற்போது குக்கூவில் இருக்கும் எல்லா மொழிகளிலும் இந்த சிறப்பம்சம் செயல்படுத்தப்படும்.

தட்டச்சு செய்யாமல் உள்ளடக்கத்தை உருவாக்க உதவும் வகையில் இந்தடாக்டு டைப்அம்சத்தைப்படுத்தும் உலகின் முதல் சமூக ஊடக தளம் குக்கூ ஆகும் என இதன் துணை நிறுவனர் மயங்க் பிடாவட்கா தெரிவித்துள்ளார்.

Comments