திருவண்ணாமலை கழக வீரர் கவுதமனுக்கு நமது வீரவணக்கம்

திருவண்ணாமலையில் திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கவுதமன் (வயது 71) அவர்கள் உடல் நலக் குறைவால் சென்னையில் ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் நேற்று (9.5.2021) இரவு மறைவுற்றார் என்ற துயரச் செய்தி நம்மை மிகவும் வேதனைக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கியது!

மறைந்த மானமிகு தோழர் கவுதமன் அவர்கள் சீரிய கொள்கை வீரர், சென்னைக்கு அவர் வந்தபின் பெரியார் திடல் நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்வார். ‘விடுதலை' சந்தா பெற்றுத் தருவதில் கடுமையாக உழைப்பவர். அவரை மருத்துவமனையில் எப்படியும் காப்பாற்றிட முயற்சித்தும் பலன் அளிக்காதது நமக்கு மிகப்பெரிய துயரத்தை அளிக்கிறது!

அவரை இழந்து வாடும் அவரது இணையர் சாரதா, மகன் அருண்மொழி வர்மன், மகள் அமுதப்பிரியா, குடும்பத்தவர்கள், கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

அவருக்கு நமது வீரவணக்கம்.


(கி.வீரமணி)

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

10.5.2021

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image