சென்னையின் புதிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை, மே 9- சென்னை காவல் ஆணையராகப் பொறுப்பு வகித்த மகேஷ் குமார் அகர்வால் மாற்றப் பட்டு, புதிய காவல் ஆணை யராக சங்கர்ஜிவால் நியமிக் கப்பட்டார். வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று காலை பதவியேற்ற அவர், பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கரோனாவுக்கு எதிராகப் போராடும் முன்களப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காவல்துறையினர் சிறப்பாக செயல்படுகிறார்கள். தமிழக முதல்வரின் நம்பிக் கையை நிறைவேற்றும் வகை யிலும், சிறப்பாக ஆட்சிபுரியும் வகையிலும் நாங்கள் செயல் படுவோம்.

சென்னை காவல் துறை, சட்டம் - ஒழுங்கைப் பாது காக்க முன்னுரிமை கொடுத்து செயல்படும். ரவுடியிசம், கட் டப்பஞ்சாயத்து, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதி ரான குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

தமிழகத்தில் இரு வார முழு ஊரடங்கில், அரசு வழிகாட்டி நெறிமுறைக ளைப் பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும். கரோனா தொற்றால் காவல்துறையி னர் பாதிக்கப்படுவது குறித்து என் கவனத்துக்கு வந்துள்ளது. காவல்துறையினரின் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு உப கரணங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அதையும் தாண்டி, புதிய வழிகாட்டுதல்களை செயல்படுத்த உள்ளோம்.

அதன்படி, காவல்துறையினருக்கு சிறிய அளவிலான அறிகுறி தெரிந்தாலும், உட னடியாக அவர்களுக்கு பரி சோதனை மேற்கொள்ளப் படும். தொற்று உறுதியானால் தனிமைப்படுத்தப்பட்டு வீடு அல்லது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும். தனிமையில் இருக்கும் காவல்துறையினருக்கு தைரியம் அளிக்கும் வகையில், அவரிடம் தொடர்ந்து பேசு வோம். இதுவரை சுமார் 3 ஆயிரம் காவல்துறையினர் கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளனர்.

ஊரடங்கால் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும்.

ஊரடங்கில் பொதுமக்கள் வெளியில் வருவார்கள். எனி னும், அவர்களிடம் கடுமை யாக நடக்க முடியாது. எனவே, அவர்களுக்கு தக்க அறிவுரைகூறி, வெளியில் வரு வதைக் கட்டுப்படுத்துவோம். ஊரடங்கு நேரத்தில் பொது மக்கள் புகார் அளிக்கத் தடையில்லை. ஆன்லைன் மூலமா கவும் தாராளமாக புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image