பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயண அனுமதி திட்டம் அமல்

 சென்னை, மே 9-- நகரப் பேருந் துகளில் பெண்கள் இலவச மாக பயணம் செய்யும் திட் டம் நேற்று அமலுக்கு வந்தது. கட்டணம் இல்லை, பேருந்து பயண அட்டையும் தேவை இல்லை என்பதால் பெண்கள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். தமிழகம் முழுவ தும் 5,600 பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து கழக அதி காரிகள் தெரிவித்தனர்.

தமிழக முதல்வராக கடந்த 7ஆம் தேதி பொறுப் பேற்றுக் கொண்ட மு..ஸ்டா லின் முதல் நாளிலேயே 5 முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கும் வகையில் கோப்பு களில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றாக, திமுக தேர் தல் அறிக்கையில் கூறியபடி, வேலைக்கு செல்லும் பெண் கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட அனைத்து பெண் களும் நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணம் செய் யலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழகம் முழு வதும் அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங் கும் சாதாரண நகரப் பேருந் துகளில், பணிபுரியும்மகளிர் உள்ளிட்ட அனைத்து பெண் களும் நேற்று இலவசமாக பயணம் செய்தனர். கட்ட ணம் இல்லை,பயண அட்டை யும் தேவை இல்லைஎன்பதால், பெண்கள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.

இத்திட்டம் மூலம் போக் குவரத்து கழகங்களுக்கு ஏற் படும் கூடுதல் செலவு ரூ.1,200 கோடி அரசு மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளதால் போக்குவ ரத்து கழக அதிகாரிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்களிடம் கேட்டபோது, ‘‘அனைத்து பெண்களும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு 8ஆம் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. நகரப் பேருந்துகளில்சாதா ரண கட்டணப் பேருந்து’, ‘பெண்களுக்கு கட்டணம் இல்லைஎன ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ கம் முழுவதும் மொத்தம் 5,600 சாதாரண அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இல வசமாக பயணம் செய்யலாம். மொத்தம் உள்ள நகரப் பேருந் துகளில் 60% பேருந்து கள் இதில் அடங்கும். விரைவு, சொகுசு, ஏசி பேருந்துகளுக்கு இச்சலுகை பொருந்தாது’’ என்றனர்.

தமிழகத்தில் சில பகுதி களில் நகரப் பேருந்துகளில் நேற்று பயணம் செய்த திரு நங்கைகளிடமும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதற்கு அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிலையில், பெண் செய் தியாளர் ஒருவர், “இலவச பேருந்து பயணத் திட்டத்தை பெண்கள் மட்டுமின்றி, திரு நங்கைகளுக்கும் அறிவித்தால் நன்றாக இருக்கும்என்று தனது ட்விட்டர் பதிவு மூலம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, முதல்வர் மு..ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘‘மகளிர் நலன், உரிமையுடன் திருநங் கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது முன்னாள் முதல் வர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங் கள் அதை கவனப்படுத்திய தற்கு நன்றி. பெண்கள் போலவே திருநங்கைகளும் கட்டணமின்றி பயணிப்பது குறித்து பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும்என்று தெரிவித்துள்ளார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image