திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானம்

 திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று (9.5.2021) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி  அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இரங்கல் தீர்மானம் உட்பட 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தவேண்டும் என்பதிலே பார்ப்பனர்கள் கச்சை கட்டி நின்றனர். பார்ப்பனர் சங்கம் வெளிப்படையாகவே தீர்மானம் நிறைவேற்றியது. பா... இடம் பெற்ற ...தி.மு..  கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது.

"பொதுவாக நம் நாட்டில் நடைபெறுவது அரசியல் போராட்டம் அல்ல,  ஆரியர் - திராவிடர் போராட்டம்" என்பார் தந்தை பெரியார். மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இது புரியாது;  கடந்த கால வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பார்த்தால்தான் இந்த உண்மை புரியும்.

நடந்து முடிந்த தேர்தலில் பார்ப்பன ஊடகங்களால்  நடத்தப்பட்ட ஒரு சார்புப் பிரச்சாரம் - மத்திய பார்ப்பன பா... ஆட்சியின் தந்திரங்கள் இவற்றை எல்லாம் முறியடித்து,  தி.மு.. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி - தமிழ் மண் தந்தை பெரியார் மண்ணே- திராவிட மண்ணே என்பதை வரலாற்றுக்கு மீண்டும் ஒரு முறை முரசடித்துப் பிரகடனப்படுத்தி விட்டது.

திமுகவின் மூன்றாவது முதலமைச்சராக தளபதி மு.. ஸ்டாலின்  பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஏராளமான சவால்கள் அவரை நோக்கித் தோள் தட்டி நிற்கின்றன. கஜானா காலி என்பதையும் கடந்து கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் கடன் என்ற நிலைதான்.

சரியான திட்டமிடலின் அடிப்படையில் இவற்றையெல்லாம் புறங்கண்டு தி.மு.. ஆட்சி மக்கள் நலன் சார்ந்து, சாதனை மிக்க ஆட்சியாகக் கம்பீரமாகப் பவனி வரும் என்பதில் அய்யமில்லை.

"இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதில் திராவிடர் கழகம் வாளும் கேடயமுமாக இருக்கும்" என்று திராவிடர் கழகத் தலைவர் நேற்றைய காணொலியில் கூறிய கருத்து மிகவும் முக்கியமானது.

எந்தவிதப் பிரதிப் பலனையும் எதிர்பார்க்காமல்  மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு திராவிடர் கழகம் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும்.

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் முக்கியமாக - தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த - அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை நிறைவேற்றுவதற்கு திமுக ஆட்சி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையிலும் இது கூறப்பட்டுள்ளது. தந்தைபெரியார் மறைந்தபோது - முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுப்பது குறித்துக் கூறி இருக்கிறார். அந்த முள் என்பது இந்த அர்ச்சகர் பிரச்சினையை செயல்படுத்தாத நிலையைத்தான் குறிப்பிடும்.

203 பேர் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.. தலைவர் தளபதி மு.. ஸ்டாலினை சந்தித்த நேரத்தில்கூட தமிழர் தலைவர் அதனை நினை வூட்டினார்.

இதனைச் செயல்படுத்துவதன் மூலம் ஒரு மாபெரும் சமூகப் புரட்சிக்கான புத்தொளியைக் காணப் போகிறோம். ஜாதி ஒழிப்புத் திசையில் இது மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கப் போகிறது.

தாழ்த்தப்பட்டவர்களும் ஹிந்துக்கள்தான் என்று கூறும் பார்ப்பனர்கள், பா... உள்ளிட்ட சங்பரிவார்கள் இந்தப் பிரச்சினையில் சரியாக நடந்து கொள்ளவில்லையானால், மிச்ச சொச்ச நடமாட்டமும் பூண்டற்றுப் போகும் என்பது மிகப் பெரிய உறுதியாகும்.

அண்டை மாநிலமான கேரளாவில் பெரிய அளவில் இந்தப் புரட்சி நடந்தேறியுள்ளது. தமிழ்நாட்டிலும் இருவர் அர்ச்சகராக்கப்பட்டுள்ளனர்.

முத்தமிழ் அறிஞர் நிறைவேற்றிய சட்டத்தை அவரது திருமகனார் முழு வெற்றியாக மலர்ச்சி அடையச் செய்வார் என்பதில் அய்யமில்லை.

இந்த 203 பேரையும் அர்ச்சகராக ஆக்குவதோடு, அர்ச்சகர் பயிற்சியையும் தொடர்ந்து நடத்தி - தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லாக் கோயில்களிலும் இடஒதுக்கீட்டின் அடிப் படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படும் அந்த நடப்பைப் பார்த்திட நம் அகமும் புறமும் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கிறது.

பார்ப்பனப் புரோகிதர் இல்லாமல் நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணத்திற்கு அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது சட்ட வடிவம் கொடுத்தார். அதுபோலவே இந்த அர்ச்சகர் சட்டமும் தமிழர்களின் தன்மான வரலாற்றில் முக்கிய பொன்னேடாக, கல்வெட்டாக அமையும். அந்த நாளை விரைவில் எதிர்ப்பார்ப்போம்!

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image