இனமானப்போரில் திராவிடம் வென்றது!

வெற்றி முழக்கத்துடன் தஞ்சையில் தந்தைபெரியார்அறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து - இனிப்பு வழங்கல்

தஞ்சை,மே 7-தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெற்று 6ஆம் முறையாக திமுக ஆட்சி அமைகிறது.தி.மு. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் முதல்அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதின் மகிழ்ச்சியை வாழ்த்து தெரிவித்து கொண்டாடும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்து அறிக்கையின் வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பதாதைகளை தஞ்சை பெரியார்சிலை, கீழராசவீதி பெரியார் இல்லம், மாதாக்கோட்டை பூபதி நினைவு பெரியார் படிப்பகம் ஆகிய இடங்களில் மண்டல தலைவர் மு.அய்யனார்  அறிவுறுத்தலின்படி வைக்கப்பட்டு 3.5.2021 அன்று 12 மணியளவில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் அவர்கள் தலைமையில் தந்தைபெரியார் சிலை மற்றும் அறிஞர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, இனமான போரில்திராவிடம் வென்றதுஎன்று முழக்கமிட்டு கொண்டாடப்பட்டது,

நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், மாநில கலைத் துறை செயலாளர் .சித்தார்த்தன், மாநில ..துணைத்தலைவர் கோபு. பழனிவேல், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக் குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு .இராமலிங்கம், மாவட்ட பக செயலாளர் .அழகிரி, மாவட்ட . அமைப்பாளர் பொ.பொன்ராசு , மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் இரா.சரவணகுமார் இரா.வீரக்குமார்,கோவிந்தராசு மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இரா.கபிலன், .பெரியார் செல்வன் ஆகியோர் பங்கேற்று வெற்றி முழக்கமிட்டு மகிழ்ந்தனர்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image