பணியாளர், விற்பனையாளர் அனைவருக்கும் தடுப்பூசி

சென்னை, மே 8 தீவிரம் பெற்றுள்ள புதிய கரோனா தொற்று, நமது சமூகத்தின் அனைத்து அங்கங்களையும் பாதித்து, மீண்டும் ஒரு சவாலாக வடிவம் பெற்றுள்ளது.

சோனாலிகா டிராக்டர்ஸ் கடந்த ஏப்ரல் மாதமே, தனது ஹோசியாப்பூர் தொழிற்சாலை வளாகத்தில் 5400 பேருக்குத் தடுப்பூசி போடப்படுவதை முன்னின்று நிறைவு செய்துள்ளது. இந்த மே மாதத்திலும் இப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு, தொழிற்சாலையில் மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தன்னுடன் தொடர்பில் உள்ள அனைவரும் கோவிட் தொற்றுக்கு எதிராக பாதுகாப்புப் பெறுவதை உறுதி செய்யும் திட்டத்தில் உள்ளது.

தற்போது நிலவும் சவால்கள் அதிகரித்த, கடினமான சூழல் குறித்து, தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட சோனாலிகா குழுமத்தின் செயல் இயக்குனர் ரமன் மிட்டல், இந்தியா அதன் வரலாற்றில் மிக மோசமான ஒரு காலகட்டத்தை தற்போது சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் நமது தாயகத்தின் சவால்களை எதிர்கொள்ள துணை நிற்பதோடு, அவற்றை வெற்றிகண்டு மீண்டெழ நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க, தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். இந்த நேரத்தில், நமது விற்பனை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Comments