ஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

சி.பி.அய். என்ற மத்திய புலனாய்வு தனித் துறையில் துணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி கே.ரகோத்தமன் (வயது 72) அவர்கள், காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைகிறோம். சிறந்த அதிகாரியாக கடமை உணர்வுடன் ஓர்ந்து கண்ணோடாது காவல் துறையில் 36 ஆண்டுகள் பணிபுரிந்து உழைப்பால் உயர்ந்த பெருமகன், பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து டில்லி பதவிக்கு உயர்ந்தவர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்குப் பற்றிய புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சிய நூலை  எழுதிப் புகழ் பெற்றவர். மறைந்த நண்பர்

கா.ஜெகவீரபாண்டியன் மூலம் எனக்கு அறிமுகம் ஆனவர். தொலைக்காட்சி விவாதங்களில் பல உண்மைகளை பொறுப்போடு எடுத்து வைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர். அவரது மறைவு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும்  குடும்பத்தினருக்கும், நண்பர் களுக்கும், நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் உரித்தாகுக!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

12.5.2021

Comments