ஆசிரியருக்குக் கடிதம் >>>

 மனம் நிறைந்த வாழ்த்துகள்

திராவிடம் வெல்லும்என்ற முழக்கத்தை முன் மொழிந்து தமிழர்கள் நடுவில் பெரும் முழக்கமாய் அதனை மாற்றி - திராவிட ஆட்சி மலர நாடு முழுவதும் கொடிய கரோனாவுக்கும் மத்தியில் தீப் பந்தமாய் - தமிழர் நலன்களை சுயநலத்திற்காக அடகு வைத்து அடிமை ஆட்சி நடத்தியவர்களையும் - அவர்களின் எஜமானர்களான சனாதனவாதிகளின் எரித்து சொல்லணா துயர் அனுபவித்த மக்களுக்கு ஒளியாய் மிளிர்ந்து திமுகவிற்கு ஆதரவாய் பரப்புரை மேற்கொண்டு இன்று திமுகவை அரியணையில் ஏற்றி வெற்றி கண்டிருக்கிறார் நம் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள்.

இந்த 10 ஆண்டுகளில் நாம் இழந்த அத்துணை உரிமைகளை மீட்டெடுக்கவும், ‘நீட்டை தமிழகத்தை விட்டுத் துரத்தவும், தமிழர்கள் இழந்த அரசு வேலைவாய்ப்புகளை மீட்டெடுக்கவும் ஆசிரியரின் அயராத முயற்சிக்கு தி.மு.கழக ஆட்சி துணைநிற்கும் என்று திடமாக நம்பி கருஞ்சட்டைப் படையினர், ஆசிரியர் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் தயாராய் நின்று துணையாய்  நிற்போம்.

தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் அவருக்கு உறுதுணையாய் நின்று வழிநடத்திய நம் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் வாழ்த்துகள் வணக்கங்கள்.

- சே.குணவேந்தன்

பெங்களூரு

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image