தமிழக அரசின் தலைமைச்செயலாளராக வெ.இறையன்பு நியமனம்

 சென்னை, மே 9 தமிழக அரசின் தலைமைச்செயலாளராக நியமிக் கப்பட்டுள்ள வெ.இறையன்பு, முதல்-அமைச்சர் மு..ஸ்டாலினிடம் வாழ்த்துப்பெற்றார். தினத்தந்தி பவள விழாவில் இவர் இலக்கியப் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் 7.5.2021 அன்று  மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித்துறையின் பொது இயக்குநராக இருந்த வெ.இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை தலைமைச்செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ.இறையன்பு, முதல்-அமைச்சர் மு..ஸ்டாலினை 7.5.2021 அன்று சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

Comments