அட, அடிமட்ட புத்திசாலிகளே! : பசு மூத்திரம்- கரோனாவுக்கு மருந்தாம்

லக்னோ,மே10- உத்தரப்பிரதேசத்தின் பெய்ரியா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் சிங் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"கரோனா கால கட்டத்தில் நாள்தோறும் சுமார்

18 மணி நேரம் மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன். ஆனால் எனக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை. நான் ஆரோக்கியமாக இருக் கிறேன்.  நான் கோமியம் (பசு மூத்திரம்) குடித்து வருவதால் கரோனா தொற்று ஏற்படவில்லை.

கோமியம் குடிப்பதால் இயற்கையாகவே உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கோமியத்தால் கரோனாவில் இருந்து தப்பிக்க முடியுமா என்று சந்தேகப்பட வேண் டாம். நமது கருத்தை விஞ்ஞானிகள் ஏற்காவிட்டாலும் பரவாயில்லை. அறிவியல் பூர்வமான அனைத்து நடவ டிக்கைகளும் கரோனா விவகாரத்தில் தோல்வி யடைந்து விட்டன. இந்த நேரத்தில் நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். கோமியம் குடிப்பது உள்ளிட்ட நமது பாரம் பரிய வழக்கங்களை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். நாள்தோறும் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீரில் 50 மி.லி. கோமியத்தை கலந்து குடித்து வந்தால் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாது."

இவ்வாறு பாஜக சட்ட மன்ற உறுப்பினர் சுரேந்தர் தெரிவித்துள்ளார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் சிங்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

Comments