புதிய அமைச்சரவைக்கு வாழ்த்து!

            பெரியார் நினைவு சமத்துவபுரம், அண்ணா நூற்றாண்டு நூலகம், செம்மொழி தமிழ் நிறுவனங்களை சீரமைத்திடுக!

            கரோனா ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் ஏடுகள், இதழ்கள், எழுவர் விடுதலை குறித்த தீர்மானங்கள்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைமுன்னுரிமை கொடுத்து உடனே பணி நியமனம் செய்க!

 மத ஊர்வலங்களுக்கு, விழாக்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி - மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள்!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்


சென்னை, மே 9 புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துத் தெரிவித்தும், கரோனா ஒழிப்பு, பெரியார் நினைவு சமத்துவபுரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தமிழ் செம்மொழி நிறுவனம் சீரமைப்பு, எழுவர் விடுதலை, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமனம், ஊரடங்கு காலத்தில் மத விழாக்களும், மத ஊர்வலங்களுக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்தல் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் காணொலி மூலம் இன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1   

இரங்கல் தீர்மானம்

கீழ்க்கண்ட பெருமக்கள், கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், மறைவிற்கு திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

திண்டுக்கல் தி.. பாலு (மறைவு, 26.3.2021), அத்திவெட்டி ஜோதி (மறைவு, 3.4.2021), பெரம்பூர் பொறியாளர் .முகிலரசு (மறைவு, 5.4.2021), திருத்துறைப்பூண்டி பெரியார் பெருந்தொண்டர் தோழர் கு.காந்தீஸ்வரன் (மறைவு, 6.4.2021), தோழர் வே.ஆனைமுத்து (மறைவு, 6.4.2021), தருமபுரி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சின்னராசு (மறைவு, 7.4.2021), அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயல் தலைவர் தோழர் ஜே.பார்த்தசாரதி (மறைவு, 15.4.2021), புதுச்சேரி கழகத் தோழர் .கண்ணன் (மறைவு, 16.4.2021), பகுத்தறிவு நகைச்சுவை நடிகர் விவேக் (மறைவு, 17.4.2021), கோவை மேனாள் மாவட்டத் தலைவர் சிங்கை ஆறுமுகம் (மறைவு, 19.4.2021), திண்டிவனம் மாவட்டத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் மு.கந்தசாமி (மறைவு, 25.4.2021), ஓசூர் பெரியார் சுப்பிரமணி (மறைவு, 26.4.2021), ஆய்வாளர் பெ.சு.மணி (மறைவு, 28.4.2021), மும்பை - தாராவி ஏக்நாத் கெய்க்வாட் (மறைவு, 28.4.2021), உரத்தநாடு இரா.ராஜா (மறைவு, 29.4.2021), முன்னாள் அமைச்சர் அரங்கநாயம் (மறைவு, 29.4.2021),  கீழவாளாடி .வீரமணி (மறைவு, 1.5.2021), சமூகநீதிப் போராளியும், சட்ட நிபுணருமான சுப்பாராவ் (மறைவு, 2.5.2021), தருமபுரி தோழர் வி.பா.ஆதவன் (மறைவு, 3.5.2021), தமிழ் மண் பதிப்பக உரிமையாளர் உரத்தநாடு கோ.இளவழகன் (மறைவு, 4.5.2021), மாரண்ட அள்ளி தோழர் கிருஷ்ணன் (மறைவு, 7.5.2021).

தீர்மானம் எண்: 2

புதிய அமைச்சரவைக்கு வாழ்த்து

16 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று புதிய அமைச்சரவை அமைத்துள்ள மாண்புமிகு மானமிகு மு..ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவைக்கு இக்கூட்டம் தன் வாழ்த்துகளைப் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.

தி.மு.. கூட்டணியில் இடம்பெற்று ஒருமித்த வகை யில் உழைத்து வெற்றியைத் தேடித் தந்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், கட்சியினருக்கும் இக்கூட்டம் தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்களித்துப் பெரு வாரியான வெற்றியை ஈட்டித் தந்த வாக்காளர்களுக்கு இக்கூட்டம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு எல்லா அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த சட்ட மன்றம் ஒரு முன்மாதிரியானதாக இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் செயல்படவேண்டும் என்ற விழைவினை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 3 

கரோனா ஒழிப்புக்கு முன்னுரிமை

நாட்டையே மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தும் கரோனாவை ஒழிக்கும் பணியை ஒரு மக்கள் இயக்கமாக நடத்துவது என்று அறிவித்துள்ள முதலமைச்சரின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.

கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் அனைவரும் இதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும் என்றும், அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளையும், நிபந்தனை களையும் ஏற்றுச் செயல்படவேண்டும் என்றும் பொதுமக்களையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், முகக்கவசம், தனி மனித இடைவெளி, சோப்பால் கை கழுவுதல் இவற்றைத் தவிர்க்காமல் மேற்கொள்ளவேண்டும் என்றும் பொது மக்களை இச்செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள் கிறது. இவை நம் உயிர் காக்கவே - அரசுக்காக அல்ல என்பதையும் பொதுமக்கள் உணரவேண்டும் என்றும் இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண்: 4

தி.மு.. ஆட்சியின் பாராட்டத்தக்க

சாதனைகளின் தொடக்கம்!

பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் சென்ற முதலமைச்சர் மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்கள், அய்ந்து முக்கிய ஆணைகளைப் பிறப்பித்திருப்பது - மக்கள் நல வாழ்வில் தி.மு.. ஆட்சி வைத்திருக்கும் அக்கறை யையும், நல்லெண்ணத்தை யும், செயல்திறனையும் வெளிப்படுத்துவதாகும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் தி.மு.. ஆட் சியின் இந்தத் தீவிர செய லூக்கத்தை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு வர வேற்று பாராட்டுகிறது.

தீர்மானம் எண்: 5 ()

அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்பளித்து அர்ச்சகர் உரிமைச் சட்டத்தை அமல்படுத்துக!

தி.மு.. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 203 பேருக்கும், தமிழகக் கோவில்களில் பணியாற்றும் வகையில் முன்னுரிமை கொடுத்து ஆணை பிறப்பிக் குமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

அனைத்து ஜாதியினருக்கும் பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடரவேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5() 

பெரியார் நினைவு சமத்துவபுரம் - சீரமைத்திடுக!

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, தமக்கே உரித்தான வகையில், ஜாதி ஒழிப்பு சமத்துவக் கண்ணோட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நாடெங்கும் உருவாக்கினார்.

உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்த மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்கள்தான் பெரும்பாலான பெரியார் நினைவு சமத்துவபுரங்களைத் திறந்து வைத்தார்.

...தி.மு.. ஆட்சியில் அவை போதிய பரா மரிப்பு இல்லாமல் சீர்கெட்ட நிலையை அடைந் துள்ளன. அவற்றைச் சீரமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்வதுடன் - பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்தவித மத வழிபாட்டுச் சின்னங் களும் இருக்கக் கூடாது என்று திட்டவட்டமான விதிமுறைகள் இருந்தும், அதற்கு விரோதமாக பல இடங்களில் மதவழிபாட்டுச் சின்னங்கள் திணிக்கப் பட்டுள்ளன - உடனே கவனம் செலுத்தி, பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நோக்கத்தை நிறைவேற் றுமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 6

மத்திய அரசின் வருண தரும, சனாதனக்

கல்வித் திட்டத்தைப் புறக்கணித்திடுக!

மத்திய பா... ஆட்சியின் தேசிய கல்வித் திட்டம் 2019 - என்பது சனாதன கொள்கைகளைப் போதிப் பதுடன், ஹிந்தி, சமஸ்கிருதத்தையும் திணிக்கும் போக்கில் செயல்படுகிறது - இத்தகைய கல்வித் திட்டத்தை முற்றிலுமாக நிராகரிக்குமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

2021 ஆம் ஆண்டுக்கான பாடத் திட்டம் என்ற பெயரால் பல்கலைக் கழக நிதி உதவிக் குழு (யு.ஜி.சி.) வரலாற்றையே தலைகீழாகப் புரட்டும் திட்டத்தைத் தயாரித்துள்ளது.

எடுத்துக்காட்டாக இதுவரை வரலாற்று ஆசிரியர் களாலும், தொல்லியல் துறையாலும் நிறுவப்பட்ட சிந்துவெளி திராவிட நாகரிகம் என்பது மாற்றப்பட்டு, சிந்து - சரசுவதி நாகரிகம் என்றும், வேத கால நாகரிகம் என்றும் திரித்துப் பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.

மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆரி யர்கள் என்ற வரலாற்று உண்மையினைப் புரட்டி ஆரியர்கள் இந்தியப் பூர்வீகக் குடிகளே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய சமுதாயத்தை இந்து சமுதாயம் என்றும், முசுலிம் சமுதாயம் என்றும் பிளவு செய்யும் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த விபரீதமான பேரபாயத்தை முளையிலேயே கிள்ளி எறியும் பணியை தந்தை பெரியார் பிறந்த - திராவிட இயக்கம் செழித்த தமிழ் மண் செய்ய வேண்டும் என்றும், தி.மு.. அரசு தொடக்க நிலையிலேயே இந்தத் திட்டத்தை முற்றிலும் நிராகரிப்பதாக அறிவிக்கவேண்டும் என்றும் இச்செயற்குழு முக்கியமாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 7

கழகத்தின் பிரச்சாரப் பணிகள்

கரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்திட முடி யாத ஒரு சூழலில், காணொலிமூலம் ஆங்காங்கே கருத்துப் பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது பாராட்டத்தக்கது.

இதுவரை இந்த முறையை மேற்கொள்ளாத பகுதிகளிலும் இயக்கப் பிரச்சாரகர்கள், பேச்சாளர்கள், பகுத்தறிவாளர்களைப் பயன்படுத்தி காணொலி கூட்டங்களை நடத்தவேண்டும் என்பதை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல், நூல்களைப் பரப் புதல், சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட பணிகளையும், கரோனா காலகட்டத்தில் மக்களுக் கான தொண்டினையும் கழகத் தோழர்கள் மேற் கொள்ளவேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 8

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் - செம்மொழி நிறுவனம் இவற்றைச் சீரமைத்தல்

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டையொட்டி -அவருக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாக ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக தி.மு.. ஆட்சியில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 2010 இல் அண்ணாவின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாளில் சென்னை கோட்டூர்புரத்தில் முதலமைச்சர் கலை ஞரால் திறக்கப்பட்ட (8 தளங்கள் - 3.75 லட்சம் சதுர அடி - ரூ.180 கோடி செலவில் 5 லட்சம் நூல்களோடு தொடங்கப்பட்ட) நூலகத்தை அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக உருக்குலைக்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, சீர்படுத்தி மக்களுக்கு நல்ல வகையில் பயன்படும்படி செய்ய ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 9

அரசு நூலகங்களுக்கு ஏடுகள் -

இதழ்கள் இடம் பெறுவதற்கு ஆவன செய்க!

அரசு நூலகங்களில் நூலகத்துறை சார்பில் சந்தா கட்டி அனுப்பப்பட்டு வந்த ஏடுகள், இதழ்களை அரசியல் நோக்கத்தோடு கடந்த ஆட்சியில் நிறுத்தப் பட்டதை மாற்றி, மீண்டும் அரசு நூலகங்களில் ஏடுகளும், இதழ்களும் இடம்பெற ஆவன செய் யுமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. அதேபோல, அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் கவனம் செலுத்தி, எழுத் தாளர்களையும், பதிப்பகத்தார்களையும், வாசிப்பாளர் களையும் ஊக்கப்படுத்துமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முயற் சியால் தி.மு.. ஆட்சியில் தமிழுக்குச் செம்மொழி தகுதி பெற்றுத்தரப்பட்டது.

...தி.மு.. ஆட்சியின் பாரா முகத்தாலும், மத்திய அரசின் தமிழ்மொழி மீதான துவேஷ சிந்தனையாலும் அந்நிறுவனம் அனாதையாக்கப் பட்டு விட்ட நிலையில், தி.மு.. அரசு இதில் முக்கிய கவனம் செலுத்தி, இந்நிறுவனத்தை மேலோங்கச் செய்திட அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 10

ராஜீவ் காந்தி கொலை:

எழுவர் விடுதலை குறித்து...

ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்படுத்தப்பட்ட எழுவர் மீதான விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்தும், தமிழ்நாடு அமைச்சர வையும் அவர்களை விடுதலை செய்யும் வகையில் முடிவு செய்து ஆளுநருக்கு அனுப்பியும், இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படாமல் 30 ஆண்டு காலமாக சிறையில் வாடுவது எந்த வகையிலும் சட்டப்பூர்வமானதும் அல்ல - நியாயப்பூர்வமானதும் அல்ல என்பதால், இந்தப் பிரச்சினையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.. அரசு கூடுதல் கவனம் செலுத்தி, எழுவரையும் விடுதலை செய்ய ஆவன செய்யுமாறு இச்செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 11

சென்னை உயர்நீதிமன்றத்தின்

முக்கிய கவனத்திற்கு...

மிகக் கடுமையாக கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில் அதனைக் கட்டுப்படுத்திட தீர ஆய்வு செய்து இரண்டு வார காலம் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான இந்தக் காலகட்டத்தில் மத விழாக்கள், மத ஊர்வலங்களை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருப்ப தானது, தமிழக அரசின் நோக்கத்திற்கு ஊறு விளை விப்பதாகவும், கரோனா தொற்றினை மேலும் பரவச் செய்வதற்கு வழி வகுப்பதாகவும் அமையும் என்பதை இச்செயற்குழு முக்கிய கருத்தாகக் கொள்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் பாதுகாப்பு - நலன் ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக்கொள் ளாமல், அளித்த தீர்ப்பு இந்த காலகட்டத்தில் தவறான தீர்ப்பு ஆகும்.

அரசியல் சட்டத்தின் 25, 26 சட்டப் பிரிவுகளில்கூட, மதச் சுதந்திரம் என்பது ஷிuதீழீமீநீt tஷீ ஜீuதீறீவீநீ ஷீக்ஷீபீமீக்ஷீ, னீஷீக்ஷீணீறீவீtஹ் ணீஸீபீ லீமீணீறீtலீ என்ற நிபந்தனைக்கு உட் பட்டதே என்பதை அறியாதது அல்ல - சென்னை உயர்நீதிமன்றம்.

பக்தியின் பேரால் பக்தர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிர்ச் சேதம் ஏற்படுவதைத் தடுப்பதே அரசின் கட்டுப்பாட்டின் நோக்கமே தவிர, பக்தியைத் தடுப்பதல்ல என்பதையும் மாண்பமை உயர்நீதிமன்றம் உணர்ந்ததாலேயே  முந்திய பல தீர்ப்புகளில் இதுபோன்ற மத விழாக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதால், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்து, நிறுத்தி, கரோனா தடுப்பில், தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது மக்கள் நலக் கண்ணோட் டத்தில் மிக முக்கியம் என திராவிடர் கழக தலைமைச் செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.

சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தனது கருத்தினை மறுபரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கரோனாவால் உயிர் இழந்தவர்களுள் 50 சதவிகிதம் மத விழாவான கும்ப மேளாவுக்குச் சென்று வந்தவர்களே என்ற தகவ லையும் இந்த நேரத்தில் உயர்நீதிமன்றத்தின் கவனத் திற்கு இச்செயற்குழு கொண்டு வர விரும்புகிறது.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image