தேர்தல் பரப்புரையின்போது பெறப்பட்ட மனுக்கள்மீது நடவடிக்கை- தனித்துறை அமைப்பு: முதல்வர் அறிக்கை

சென்னை, மே 10- மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு தனித்துறை அமைக் கப்பட்டுள்ளது குறித்த தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, நான் மாவட் டந்தோறும் மக்களைச் சந்தித்து, அவர்களிட மிருந்துஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற திட்டத்தின்கீழ், அவர்களின் பொதுவான அடிப் படைப் பிரச்சினைகள் மற்றும் தனிப் பட்ட குறைகள் குறித்து மனுக்களைப் பெற்றேன்.  தி.மு.. ஆட்சி அமைந்தவு டன், அவற்றைப் பரிசீலித்து, பதவி யேற்ற 100 நாட்களில் நிறைவேற்றித் தரப்படும் என்று அளித்த வாக்குறுதி யின் அடிப்படையில், முதலமைச்ச ராகப் பொறுப்பேற்ற அன்றே கையொப்பமிட்ட 5 கோப்புகளில் ஒன்றாக, இப்பணிக்கென உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கென தனித் துறையை உருவாக்கி, அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஒரு சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்களை நியமித்தேன். 

அந்தச் சிறப்புப் பணி அலுவல ரிடம் 8-5-2021 அன்று அந்த மனுக்கள் அனைத்தும் உரிய நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன.  இந்தப் பிரி வில் பெறப்பட்ட மனுக்களையெல் லாம் ஆய்வு செய்து, அவற்றை உட் கட்டமைப்பு (புதிய சாலைகள், மேம் பாலங்கள் போன்றவை), சமூக சொத் துக்கள் (பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை) மற்றும் தனிப்பட்ட நபர்களின் கோரிக்கைகள் என மூன்றாகப் பிரித்துக் கொள்ளப்படும்.  பின்னர் சம்பந்தப்பட்ட துறைக்கு அவை அனுப்பப்பட்டு, உரிய நட வடிக்கை எடுக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்படும்.  இந்தப் பணிகள் நடைபெறும் போதும், முடிவுறும் போதும், அவை தகுந்த முறையில் ஆவணப்படுத்தப்படும். 

இந்தப் பிரிவிற்கென ஒரு இணைய தளம் துவக்கப்பட்டு, அதில் மனுக் களின்மேல் எடுக்கப்படும் நடவடிக் கைகள் குறித்த விவரம் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யப்படும்.  தனி நபர் கோரிக்கை களைப் பொறுத்தவரை, முடிந்த அளவு விரைவாக அவர்களது மனுக் கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு, சாத்தியமானவை அனைத்திற் கும் உடனடித் தீர்வும், முடியாதவற் றிற்கு என்ன காரணத்தினால் கோரிக்கை நிறைவேற்ற இயலவில்லை என்ற தெளிவான காரணமும் அளிக் கப்படும்.  மேலும், அவர்கள் அது குறித்து தொடர்ந்து மனு செய்வதைத் தவிர்க்கும் வகையில், மாற்று வழியில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள வழிகாட்டுதல்கள் தரப்படும்.  தமிழக அரசைப் பொறுத்த வரையில், இந்த மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது தான் நோக்கம். 

ஆனால், இப்போது கரோனா என்ற கொடுந்தொற்று நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கிறது.  தமிழ கத்தில் அரசு நிருவாகம் பெருமளவில் இதற்கென முயற்சி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.   எனவே, அடிபட்ட பாகத்திற்கு உடல் அதிக இரத்தத்தைச் செலுத்துவதைப் போல், நாம் நிருவாகத்தின் மொத்த கவனத்தையும் கரோனா மீது செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  எனவே, அளிக்கப்பட்ட அனைத்து மனுக்களின் மீதும், கரோனா காலம் என்பதால் இயன்ற வரை மக்களின் தேவைக்கேற்ப சிறப் பாகவும், விரைவாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்; அவற்றிற்குத் தீர்வும் காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட வேண்டுமென்ற அடிப் படையில் தான், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு துறை இதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறேன்.  இந்தக் கோரிக் கைகளை எந்தத் துறையின் மூலம் நிறைவேற்றலாம் என்பதைத் தீர்மா னித்து, உரிய நடவடிக்கை எடுப்பதைக் கண்காணிக்கவும், அதன் விவரத்தை மனுதாரர்களுக்கு தெரி விக்கப்படு வதை உறுதி செய்யவும் வேண்டுமென இத்துறைக்கென நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலருக்கு அறிவுரை வழங் கியுள்ளேன் என்பதை மனுக்களை அளித்த மக்கள் அனை வருக்கும் அன் புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image