கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கையில் மிதந்த அவலம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 18, 2021

கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கையில் மிதந்த அவலம்!

 மத்திய மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு


புதுடில்லி,மே18- கரோனாவால் இறந் தவர்கள் உடல்கள் கங்கையில் மிதந்து வந்த அவலத்தை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இறந் தோர் கண்ணியம் காக்க சிறப்பு சட்டங்களை இயற்றுங்கள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றால் வட மாநிலங்களில் கொத்து கொத்தாக இறக்கின்றனர். இவர் களின் உடல்களை தகனம் செய்வதில் மின் மயானங்களில் பல மணி நேர காத் திருப்பு, விறகுகட்டைகள் தட்டுப் பாடு, அடக்கம் செய்ய இடப்பற்றாக் குறை நிலவுகிறது.

இந்தநிலையில் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இறந்தவர்களின் உடல்களை கங்கை நதியில் வீசி உள்ளனர். அந்த உடல்கள் மிதந்து வந்தன. இது குறித்த தகவல்கள், காட்சிகள் வெளி யாகி நாட் டையே உலுக்கிய நிலை யில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கையில் இறங் கியது.

அது, கரோனாவால் இறந்தவர் களின் உடல்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசு களுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள் ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இறந்தோர் கண்ணியத்தை, உரிமைகளை காக்கிற வகையில் சிறப்பு சட்டங்களை இயற்ற வேண் டும். இறந்தோரின் உரிமை, கண் ணியத்தை குலைக்கிற வகையில் மொத்தமாக அடக்கமோ, தக னமோ செய்ய அனுமதிக்கக் கூடாது. பில் தொகை நிலுவை என்பதால் இறந்தோரின் உடல் களை மருத் துவமனை நிர்வாகங்கள் தர மறுக்கக்கூடாது. கேட்க ஆளற்ற உடல்களையும் பத்திரமான சூழ லில் பாதுகாக்க வேண்டும். ஒருவர் இறந்தால் அது குறித்த தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு, அவசரகால ஆம்பு லன்ஸ் சேவைக்கு, அரசு நிர்வாகத் துக்கு, சட்ட அதிகாரிகளுக்கு இவற் றில் எது சாத்தியமோ அதன்படி தெரிவிப்பது குடி மக்களின் கடமை. இறப்பவர்கள் பற்றிய தரவுகளை டிஜிட்டல் முறையில் பராமரிக்க வேண்டும். வங்கிக்கணக்கு, ஆதார் அட்டை, காப்பீடு போன்றவற்றில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். உடல் பரிசோதனை களை தாமதிக்காமல் காவல்துறை நிர்வாகம் பார்த்துக்கொள்ள வேண்டும். கேட்க ஆளற்றவர்களின் உடல்களை கண்ணியமான முறை யில் இறுதி நிகழ்வுகளை செய்வதற்கு தொண்டு நிறுவனங்கள் முன் வர வேண்டும். தற்காலிக தகன மய்யங்களை அமைக்க வேண்டும். உடல்களை இறந்தவர்களின் ஊருக்கு அனுப்பி வைக்க முடி யாத சூழலில், மாநில நிர்வாகமோ உள்ளூர் நிர்வாகமோ இறுதி நிகழ்வுகளை மரபுமுறைப்படி செய்யவேண்டும். இறந்தோர் உடல்களை குவித்து வைக்க அனு மதிக்கக்கூடாது.

மின்தகன மய்யங்களை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இறுதிச் நிகழ்வுகளை செய்கிற ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவ சங்களை வழங்க வேண்டும். இந்த பரிந்துரைகள் அடங்கிய உத்தர வின்மீது எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

No comments:

Post a Comment