கரோனா கொடுந்தொற்று பெரியார் மருத்துவ அணியின் தொண்டறத் துவக்கம்!

கரோனா கொடுந்தொற்றின் கோரத் தாண்டவம் குறைந்தபாடில்லை. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் எதிர்கொண்டு வெற்றியடையச் செய்யும் ஆற்றல் அறிவியலுக்கும், மக்களின் தன்னம்பிக்கைப் பொறுப்புடன் கடமையாற்றும் முதல் அமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களது ஆட்சிக்கும் உண்டு.

இந்நிலையில் பெரியார் மருத்துவ அணியின்டெலிமெடிசன்' அறிவுரைகள் மூலம் - பாதிக்கப்பட்ட உறவினர்கள், தோழர்கள் மருத்துவ அறிவுரை பெறுவதற்கு - மருத்துவ அணி இயக்குநர் டாக்டர் இரா.கவுதமன் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்து தொண்டறம் புரிய முன்வந்திருப்பது எடுத்துக்காட்டானது.

பல மருத்துவ மாமணிகளும் கூட இத்திட்டத்தில் மேலும் - அவர்களுடன் தொடர்பு கொண்டு இணைந்து, சேவையாற்ற முன்வரவேண்டும்.

தக்க வகையில் மக்கள் பயன் பெறவும், இதன்மூலம் கவலை, அச்சத்தை, நோயைத் தடுக்க, போக்கவும் உதவட்டும்!

 

கி. வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

17.5.2021

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image