கரோனா தொற்றைத் தடுக்க அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்!

சிகிச்சை, ஆக்சிஜன் பயன்பாடுகளைக் கண்காணித்திடுக!

முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை,மே10- புதிதாக அமை ந்துள்ள தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (9.5.2021)நடைபெற்றது. இதில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக் கப்பட்டு கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

மாநிலத்தில் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், 10.5.2021 முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கு சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டால் மட்டுமே, தொற் றின் பரவலை கட்டுப்படுத்தி, இறப் புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கு முறையாக நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை கண் காணிக்க வேண்டும். மருத்துவமனை களில் உள்ள வசதிகளையும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான தரமான உணவு போன்ற வசதிகளை மேம்படுத்தவும் அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது பல நெருக்கடிகளுக்கிடையே அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆக்சிஜன் முறை யாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், எந்தவிதமான சூழலிலும் ஆக்சிஜன் வீணாகக் கூடாது என் பதையும் உறுதி செய்ய வேண்டும்.

சென்னை மட்டுமல்லாமல் கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களி லும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து அரசால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை கண்காணிப்பதோடு, இத்தகைய மருந்துகள் கள்ளச்சந்தையில்,விற்பனையாவதை தடுக்க நட வடிக்கைஎடுக்க வேண்டும். தகுதி யுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தடுப்பூசி போடுவதன்முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி பயன் பாட்டை உயர்த்துவதற்கு, மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தி முனைப்பாக செயல்பட வேண்டும்.

மருத்துவம், வருவாய், காவல், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சிஉள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால் மட் டுமே மேற்கூறிய நடவடிக்கைகளில் வெற்றி பெற முடியும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் இத் துறைகளை ஒருங்கிணைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அனைவரும் இணைந்து செயல் படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image