நந்தம்பாக்கத்தில் கரோனா நோயாளிகள் பராமரிப்பு மய்யத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை, மே 9 முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நந்தம்பாக்கத்தில் கரோனா நோயாளிகள் பராமரிப்பு மய்யத் தில் மு..ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சராக மு..ஸ்டா லின் பொறுப்பேற்ற பிறகு நேற்று மாலை முதல் முறையாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் பெருநகர சென்னை மாநகராட் சியால் அமைக்கப்பட்டு வரும் கரோனா நோயாளிகள் பராமரிப்பு மய்யத்தை பார்வையிட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மாநகரப் பகுதியில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை கூடுதலாக அமைத்திடுமாறு முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவுறுத்தி யிருந்தார். இன்று (நேற்று) நந்தம்பாக் கத்தில் உள்ள சென்னை வர்த்தக  மய்யத்தில் பெருநகர சென்னை மாநக ராட் சியால் அமைக்கப்பட்டு வரும் கோவிட் பராமரிப்பு மய்யத்தை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஆக்சிஜன் சேமிப்பு நிலையம்

இம்மய்யத்தில் முதற்கட்டமாக 300 படுக்கைகளும், அடுத்த கட்ட மாக 500 படுக்கைகளும் என மொத்தம் 800 படுக்கைகள் அமைக்கப்பட்டு வரு கின்றன. இப்படுக்கை களுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக் சிஜன் சேமிப்பு நிலையம் அமைக்கப் பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்டு வரும் 300 படுக்கைகள் 10-ஆம் தேதி முதல் செயல்படும். அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந் தும், அரசு ஓமந்தூரார் மருத்துவ மனையில் இருந்தும், இம்மய்யத்திற்கான மருத்துவர்களும், செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள். இம்மையத்திற்கான உணவு மற்றும் பராமரிப்பு பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற் கொள்ளும்.

இந்த நிகழ்வின்போது, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரகத்தொழிற் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வணிகவரித் துறை ஆணையர் -முதன்மைச் செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநக ராட்சியின் கோவிட்-19 கண் காணிப்பு அலுவலர் எம்..சித்திக், ஆணையர் கோ.பிர காஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image