ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை. இவர்கள் இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     கரோனா தொற்று அதிகரித்துள்ள சூழலில் தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் அறிவிப்புகளும் நடவடிக்கைகளும்  நம்பிக்கையை யும், நல்ல துவக்கத்தையும் காட்டுகிறது என மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மோகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     கரோனா தடுப்பு நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திட மோடி அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     கோவிட்-19 இரண்டாவது அலை அதிகரித்துவரும் சூழலில்,  நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் புதிய கட்டடத்திற்கான மத்திய விஸ்டா திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளைத் மோடி அரசு தொடர்வதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களுக்கு மூச்சு தேவை, பிரதமரின் இல்லம் அல்ல என்றும் சாடியுள்ளார்.

தி டெலிகிராப்:

·     கரோனா இரண்டாவது அலை பாதிப்பால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்  நடத்த முடியாத நிலையில் ஏப்ரல் மாதத்தில் முப்பத்தி நான்கு லட்சம் சம்பளம் பெற்ற இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 73.5 லட்சம் வேலைகள் இழந் துள்ள தாக தனியார் ஆராய்ச்சி குழுவான இந்திய பொருளாதாரக்  கண்காணிப்பு மய்யம் (சி.எம்.அய்.) தெரிவித்துள்ளது. வேலை யின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 6.5 சதவீதத்திலிருந்து 7.97 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

- குடந்தை கருணா

10.5.2021

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image